அமைதி முயற்சிகளுக்கு எந்த வகையிலும் பங்களிக்க இந்தியா தயார் - பிரதமர் மோடி

0 2408
அமைதி முயற்சிகளுக்கு எந்த வகையிலும் பங்களிக்க இந்தியா தயார் - பிரதமர் மோடி

உக்ரைன் விவகாரத்தில் அமைதி முயற்சிகளுக்கு எந்த வகையிலும் பங்களிக்க இந்தியா தயாராக உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், டெல்லியில் பிரதமரை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, அமைதிப் பேச்சுவார்த்தைகள் உள்ளிட்ட உக்ரைன் நிலவரம் குறித்து பிரதமரிடம் லாவ்ரோவ் எடுத்துரைத்தார்.

இதனைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையிலான மோதலை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார். மேலும், கடந்த டிசம்பரில் நடைபெற்ற இந்தியா - ரஷ்யா இருதரப்பு உச்சிமாநாட்டின் போது எடுக்கப்பட்ட முடிவுகளின் முன்னேற்றம் குறித்தும் ரஷ்ய அமைச்சர் பிரதமரிடம் எடுத்துரைத்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments