​​
Polimer News
Polimer News Tamil.

உலக உருண்டையை தாங்கி நிற்கும் மர வடிவிலான மனிதன் !... கோவை ஆட்சியர் கிராந்திகுமார் சிலையை திறந்து வைத்தார்

கோவை-மேட்டுப்பாளையம் சாலையில், டிராபிக் சிக்னல் இல்லாத வண்ணம் அமைக்கப்பட்டுள்ள சிந்தாமணி ரவுண்டானாவில், உலக உருண்டையை மர வடிவிலான மனிதன் தாங்கி நிற்பதுபோன்ற வெண்கலச் சிலை நிறுவப்பட்டுள்ளது. மரங்கள் நடுவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சிலை வடிவமைக்கப்பட்டதாக மாநாகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது....

கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு ஒளிரும் சென்னை விமான நிலையம்... பயணிகள் உற்சாகம்

கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் விதமாக சென்னை விமான நிலையம் முழுவதும் வண்ண விளக்குகளால் ஒளிரூட்டப்பட்டுள்ளது. விடுமுறையை முன்னிட்டு விமானத்தில் சொந்த ஊர்களுக்குச் செல்லும் ஏராளமானோர், மின்விளக்கு அலங்காரங்களை உற்சாகத்துடன் கண்டு களித்தனர்....

ரகசிய தகவலின் பேரில், லாட்டரி சீட்டு விற்பனையாளர் கைது... ரூ. 2.25 கோடி ரொக்கம் மற்றும் லாட்டரி சீட்டுக் கட்டுகள் பறிமுதல்

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் லாட்டரி சீட்டு விற்ற நாகராஜ் என்பவரை பிடித்த போலீசார், அவரது வீட்டில் இருந்து 2 கோடியே 25 லட்சம் ரூபாய் ரொக்கம், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட ரூபாய் நோட்டுகளில் 2000 ரூபாய் தாள்கள் அதிகளவில் இருந்ததாக...

மின்னொளியில் ஜொலிக்கும் தேவாலயங்கள்... மோப்ப நாய்களுடன் சோதனையிட்டு போலீசார் பாதுகாப்பு நடவடிக்கை

புதுச்சேரியில் தேவாலயங்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி மின்னொளியில் ஜொலித்தன. ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் பண்டிகையைக் கொண்டாட புதுச்சேரிக்கு வந்துள்ளதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தேவாலயங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சில இடங்களில் போலீசார் மோப்ப நாய்களுடன் சோதனை நடத்தினர்....

பேருந்து நிழற்குடை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள நேரில் ஆய்வு செய்தார் திருச்செங்கோடு எம்.எல்.ஏ. ஈஸ்வரன்... பெண் பொறியாளரை கடிந்துகொண்ட ஈஸ்வரன்

திருச்செங்கோடு MLA ஈஸ்வரனின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, குமாரமங்கலத்தில் 5 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பேருந்து நிழற்குடை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாகப் புகார்கள் எழுந்ததை தொடர்ந்து அங்கு அவர் ஆய்வு மேற்கொண்டார். விதிகளின்படி 50 சென்டிமீட்டர் உயரத்துக்கு இருக்கை அமைக்கப்பட...

ரத்னகிரி அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் விபத்து... பைக் மீது கண்டெய்னர் லாரி மோதி கல்லூரி மாணவர்கள் உடல் நசுங்கி மரணம்

ராணிப்பேட்டை மாவட்டம் கீழ் மின்னல் பகுதி அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், முன்னால் சென்று கொண்டிருந்த பைக் மீது பின்னால் வந்த கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் ஆற்காடு பகுதியை சேர்ந்த பிரவீன், வசந்த் ஆகிய 2 கல்லூரி...

குடியிருப்புகளை சேதப்படுத்தி வந்த புல்லட் காட்டு யானை... டிரோன் கேமரா சத்தத்தை கேட்டு புல்லட் யானை புதருக்குள் சென்று மறையும் காட்சி

நீலகிரி மாவட்டம் பந்தலூர் சேரங்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புகளை சேதப்படுத்தி வந்த புல்லட் என்றழைக்கப்படும் காட்டு யானை  வனத்துறையினரின் ட்ரோன் கேமரா சத்தத்தை கேட்டு புதருக்குள் சென்று மறையும் காட்சி தற்போது வெளியாகி உள்ளது.  ...

பெண்ணை தாக்கி கொன்ற சிறுத்தை கால்நடைகளையும் கடித்தது... 6ஆவது நாளாக ட்ரோன், ட்ராப் கேமராக்கள் மூலம் கண்காணிப்பு

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த துருவம் கொள்ளை மேடு கிராமத்தில்  பெண்ணை தாக்கி கொன்ற சிறுத்தை கால்நடைகளை தாக்கியுள்ளது. சிறுத்தையை பிடிக்க துருவம் காப்பு காட்டில் கூண்டும் வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் மேல்அனுப்பு கிராமத்தில் சிவலிங்கம் என்பவர் பட்டியில் கட்டியிருந்த ஆடு, மாடை சிறுத்தை கடித்துவிட்டு...

சென்னை விமான நிலையத்தில் பதப்படுத்தப்பட்ட ரூ.3.6 கோடி மதிப்புடைய உயர் ரக கஞ்சா பறிமுதல்

தாய்லாந்து நாட்டில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் கடத்திக் கொண்டு வரப்பட்ட மூன்று கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்புடைய 3 கிலோ 600 கிராம் பதப்படுத்தப்பட்ட ஹைட்ரோபோனிக் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ள சுங்கத்துறை அதிகாரிகள், குருவியாக செயல்பட்ட ஒருவரை கைது...

கிறிஸ்துமஸ் விழாவில் தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பங்கேற்பு... கேக் வெட்டி கொண்டாட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை கிறிஸ்துவ இயக்கம் சார்பில் நடைபெற்ற 27 - ஆவது கிறிஸ்துவ விழாவில் தெலங்கானா  முதலமைச்சர்  ரேவந்த் ரெட்டி பங்கேற்றார். பூவாட்டம் ,அன்ன நடனம் ,முத்துக்குடை, தப்பாட்டம் ,சிங்காரி மேளம், செண்டை மேளம் ,கிறிஸ்துமஸ் தாத்தா ஊர்வலம், ராட்சத பொம்மலாட்டம்...