​​
Polimer News
Polimer News Tamil.

த.வெ.க. மாநாட்டில் அரசியலை பாம்பு என்று விஜய் பேசியதற்கு செல்வ பெருந்தகை கருத்து

அரசியல் என்ற பாம்பை பிடித்து விளையாடப் போவதாக த.வெ.க. மாநாட்டில் நடிகர் விஜய் பேசிய நிலையில், சின்ன வயதில் எல்லோரும் பாம்பை பிடித்து தான் வளர்ந்து இருப்பார்கள், தானும் அப்படித்தான் வளர்ந்ததாக, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை கருத்து தெரிவித்துள்ளார். சென்னை...

குருபூஜை விழாவுக்கு நண்பர்களுடன் காரில் சென்ற இளைஞர் காரிலிருந்து தவறி விழுந்து உயிரிழப்பு

ராமேஸ்வரம் அருகே மருதுபாண்டியர் குருபூஜை விழாவுக்கு நண்பர்களுடன் காரில் சென்ற விக்னேஷ் என்பவர் காரின் பக்கவாட்டில் தொங்கியபடி சென்றதாகக் கூறப்படும் நிலையில், மாடக்கொட்டான் கிழக்கு கடற்கரை சாலையில் தவறி கீழே விழுந்து பல அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். அவர் விழுந்ததைக்...

தீபாவளி பண்டிகையை ஒட்டி புத்தாடை வாங்க பொதுமக்கள் ஆர்வம்

கோவை ஒப்பணக்கார வீதி உட்பட நகரின் முக்கியமான கடை வீதிகளில் தீபாவளிக்கான புத்தாடைகள், நகைகள், இனிப்புகள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. போலீசார் ஆங்காங்கே தற்காலிக கோபுரங்கள் அமைத்து, ஒலிப்பெருக்கி மூலம் போக்குவரத்தை சரி செய்வதும் பாதுகாப்பாக செல்லுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்துவதுமாகவும்...

காசாவில் 2 நாள் போர் நிறுத்தம் - எகிப்து அதிபர் யோசனை

காசாவில் இரண்டு நாட்கள் போர் நிறுத்தம் கொண்டு வருவதன் மூலம் இரு தரப்பிலும் தாக்குதலை நிறுத்தி, பணயக் கைதிகளை மீட்கலாம் என, எகிப்து அதிபர் அப்துல் பத்தா அல் சிசி தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மற்றும் காசா தரப்பு பிரதிநிதிகள் இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை...

புதுச்சேரியில் கடலில் குளிக்கச் சென்று மாயமான மாணவர்களை தேடும் பணி தீவிரம்

  புதுச்சேரி மணக்குள  விநாயகர் பொறியியல் கல்லூரி பிடெக் மாணவர்களான திவாகர், மோகன்தாஸ் ஆகியோர், நண்பனின் பிறந்தநாளைக் கொண்டாட வீராம்பட்டினம் கடற்கரைப் பகுதிக்குச் சென்று கடலில் இறங்கி குளித்ததாகக் கூறப்படும் நிலையில், அவர்களை கடலலை இழுத்துச் சென்றுள்ளது. 6 பேரை மீனவர்கள் மீட்டு...

தமிழக எல்லை தாண்டி மீன்பிடித்த நாகை மீனவர்கள் 12 பேர்க்கு நீதிமன்றக் காவல்

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையிரால் கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 12 பேரை, நவம்பர் மாதம் 8ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைதான மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டதோடு அவர்கள் சென்ற படகும் பறிமுதல்...

தமிழகத்தின் உணவு உற்பத்தி 11% அதிகரிப்பு : முதலமைச்சர் ஸ்டாலின்

தமிழகத்தின் உணவு உற்பத்தி 11 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், 48 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5 லட்சத்து 59 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி நடைபெற்றுள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த மூன்றாண்டுகளில் இயற்கை பேரிடர்களால் நேர்ந்த பயிர்ச் சேதங்களுக்கு, 29 லட்சம்...

ஷாவ்மி காரைப் புகழ்ந்த ஃபோர்டு சி.இ.ஓ.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஷாவ்மி எஸ்.யூ.7 பேட்டரி காரின் தொழில்நுட்பத்தை வெகுவாகப் பாராட்டியுள்ளார் அமெரிக்காவின் போர்டு கார் தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜிம் ஃபேர்லி. கடந்த 6 மாதங்களாக ஷாவ்மி எஸ்.யூ.7 காரைத் தான் பயன்படுத்துவதாகவும், சமீபகாலமாக அமெரிக்க...

புதுச்சேரியில் பிரபலமான ஓட்டலில் வாங்கிய பரோட்டாவில் புழு - புகார் குடுத்த வாடிக்கையாளர்

புதுச்சேரி அண்ணாசாலையில் இயங்கி வரும் பிரபலமான ஓட்டலில் பரோட்டா வாங்கி  வீட்டில் பிரித்த போது பரோட்டாவில் புழு இருந்ததாக கூறி சாப்பிட்ட தட்டுடன் வந்து வாடிக்கையாளர் வீடியோ வெளியிட்டார். மணிகண்டன் என்பவர் கடந்த 24ம் தேதி வாங்கிய பரோட்டாவில் புழு இருந்தது பற்றி...

புதுக்கோட்டையில் அரசுத் தொடக்கப்பள்ளியின் 50ம் ஆண்டு முன்னிட்டு ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைச்சர் திறந்து வைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் சிதம்பர விடுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசுத் தொடக்கப்பள்ளியின், 50ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, ஸ்மார்ட் வகுப்பறைகள் மற்றும் நினைவுத்தூணை தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் மற்றும் மாவட்ட ஆட்சியர் அருணா திறந்து வைத்தனர். விழாவுக்கு வந்த...