​​
Polimer News
Polimer News Tamil.

மதுரை ,செல்லூரில் பகுதிகளில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்.!

மதுரை மாவட்டம் செல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் சில தெருக்களில் 2 மாதங்களாக தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 23வது வார்டு மற்றும் 24வது வார்டு பகுதிகளில் பாதாள சாக்கடை நிரம்பி வெளியேறும் கழிவுநீர், வீடுகள்...

நாங்குநேரி அருகே பயணியை தாக்கிய நடத்துனர் பணியிடை நீக்கம்

திருநெல்வேலியில் பயணியை தாக்கிய அரசு பேருந்து நடத்துனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மூலைக்கரைபட்டியில் இருந்து திருநெல்வேலிக்கு சென்ற பேருந்தில் மூட்டை முடிச்சுகளுடன் ஏறக்கூடாது என பயணியை நடத்துனர் சேதுராமலிங்கம் என்பவர் தடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் நடத்துநர், பயணியை தகாத வார்த்தையால் பேசி...

கனமழையால் வேகமாக நிரம்பி வரும் வைகை அணையால் மக்களுக்கு எச்சரிக்கை

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டில் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் ஆற்றங்கரையோர மக்களுக்கு பொதுப்பணித் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நீர் பிடிப்பு பகுதியில் பெய்த தொடர் மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து 71 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம்...

மோட்டார் சைக்களில் சென்ற பெண் எஸ்.ஐ., பெண் காவலர் உயிரிழப்பு

மேல்மருவத்தூர் அருகே அதிகாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்தை சேர்ந்த பெண் உதவி ஆய்வாளரும், பெண் காவலரும் உயிரிழந்தனர். வழக்கு ஒன்றின் விசாரணைக்காக மோட்டார் சைக்கிளில் இருவரும் சென்றபோது, பின்னால் வந்த  புதுச்சேரியைச் சேர்ந்த டாடா...

174 வீரர், 50 கிளார்க் பணியிடங்களை நிரப்ப கோவையில் ஆள்சேர்ப்பு முகாம்

கோவையில் நடைபெற்ற இந்திய ராணுவத்திற்கான ஆட் சேர்ப்பு முகாமில் ஏராளமானவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். 174 வீரர்கள், 50 கிளார்க் பணியிடங்களுக்காக போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இத்தேர்வில் கோவை, புதுச்சேரி மற்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். 10 ஆம் தேதி வரையில் நடைபெறும்...

கதவணை மதகுகளில் பழுது ஏற்பட்டதால் வெள்ளிபாளையம் குடியிருப்புகளுக்குள் புகுந்த மழைநீர்

கோவை மேட்டுப்பாளையம் அருகே உள்ள வெள்ளிபாளையம் கதவணை நீர் மின் திட்டத்தின் மதகுகள் பழுதானதால் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. பவானி ஆற்று தண்ணீரை தடுத்து வெள்ளிபாளையத்தில் நீர்மின் கதவணை திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், திடீரென அந்த கதவணையின் கதவுகள் திறக்காமல் செயல்...

மதுரையில் அயிரை, விரால், கெளுத்தி உள்ளிட்ட மீன்கள் உயிருடன் விற்பனை

மதுரை நெல்பேட்டையில் உள்ள மீன் சந்தையில், உயிரோடு தண்ணீரில் துள்ளி குதித்து  கொண்டிருக்கும் அயிரை , விரால், கெளுத்தி மீன்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. சத்திரப்பட்டி, அழகர் கோவில், மேலூர், உசிலம்பட்டி, திருமங்கலம் உள்ளிட்ட இடங்களில் உள்ள கண்மாய்களில் இருந்து பிடித்து வரப்படும்...

டி.டி.வி.தினகரன் மீது குற்றச்சாட்டு வைத்த திண்டுக்கல் சீனிவாசன்

பிரிந்த அனைவரும் ஒன்று சேர்ந்தால்தான் அதிமுக-வால் வெற்றி பெற முடியும் என்ற மாயத் தோற்றத்தை டி.டி.வி.தினகரன், சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய மூவரும் உருவாக்க முயற்சிப்பதாக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் நடந்த அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய...

அமரன் திரைப்பட குழுவினருக்கு அண்ணாமலை பாராட்டு

சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படத்தைப் பார்த்து திரைப்படக் குழுவினருக்கு, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பாராட்டு தெரிவித்தார். சீருடையில் இருக்கும் நமது ஆண்கள் காட்டும் வீரம், தைரியம் மற்றும் நேர்மை பல அம்சங்களில் மிகவும் முக்கியமானது என்று அண்ணாமலை தமது இன்ஸ்டாகிராம் பதிவில்...

அமெரிக்காவில் முன்கூட்டியே வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வாகனப் பேரணி

அமெரிக்காவில் நாளை அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முன்கூட்டியே வாக்கு செலுத்தும் வசதியை பயன்படுத்தி வாக்கு செலுத்த இன்றே கடைசி நாள் என்பதால் அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கொலம்பஸ் நகரில் உயர் ரக ஸ்போர்ட்ஸ் கார்களின் பேரணி...