​​
Polimer News
Polimer News Tamil.

தேர்தலுக்கு தயாராகும் அமெரிக்கா! உலகின் வித்தியாசமான தேர்தல் முறை அதிபர் தேர்வு நடப்பது எப்படி?

அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார்? உலகமே எதிர்பார்க்கும் அதிபர் தேர்தலில் வெல்லப்போவது யார்? ஜனநாயகக் கட்சியைச் ((democratic party)) சேர்ந்த தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ், குடியரசுக் கட்சியைச் ((republican party)) சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையே கடும்...

அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க கோவை வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க 2 நாள் பயணமாக இன்று கோயம்புத்தூர் வர உள்ள நிலையில், அமைச்சர்கள் எ.வ.வேலு, செந்தில் பாலாஜி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் அங்கு முகாமிட்டு அதற்கான முன்னேற்பாடுகளை கவனித்துவருகின்றனர். அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, கோவை விமான நிலைய...

எமனாக மாறிய இரும்பு கட்டில்.. தந்தை மகனின் கழுத்தை இறுக்கிய விபரீதம்.. இரும்பு கட்டில் வைத்திருப்போர் கவனத்திற்கு..

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சாணார்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோபி கிருஷ்ணன் தையல் தொழிலாளி, இவரது மனைவி லோகேஸ்வரி நத்தம் அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். கோபி கிருஷ்ணனும், மூத்த...

கொலை செய்து விட்டு கலெக்டர் ஆபீசுக்கு ஓடிப்போன குண்டு மணி..! இருந்தாலும் ரொம்ப துணிச்சல் தான்..!

அதிமுக பிரமுகரை கொலை செய்துவிட்டு , தனது வீட்டிற்கு குடிநீர் வரவில்லை என்று கலெக்டர் ஆபீசுக்கு புகார் கொடுக்கச்சென்று போலீசில் சிக்கிய குண்டு மணி இவர் தான்..! சிவகங்கை மாவட்டம் நாட்டாகுடி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். அதிமுக கிளை செயலாளரான இவர் திங்கட்கிழமை...

நெல்லையில் 17 வயது சிறுவனை வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய கும்பல்

நெல்லை மாவட்டம் மேலப்பாட்டம் கிராமத்தில் காரில் அதிவேகமாகச் சென்றவர்களைத் தட்டிக்கேட்டதற்காக 17 வயது சிறுவனை ஒரு கும்பல் வீடு புகுந்து பீர் பாட்டிலால் தாக்கி, அரிவாளால் வெட்டிச் சென்றுள்ளது. அவரது வீட்டையும் அடித்து நொறுக்கி சூறையாடிச் சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்....

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசியலுக்காக மக்களைப் பிளவுபடுத்துகின்றனர் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

அரசியல் காரணங்களுக்காக சாதி, மதம்,மொழி இனம் என்ற அடிப்படையில் மக்களை பிளவுபடுத்துகிறார்கள் என்றும் கலாச்சார நிகழ்ச்சிகளே மக்களை ஒன்றிணைக்கிறது என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார். இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உருவான தின விழா சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில்...

தெலுங்கு இன மக்கள் பற்றி அவதூறு பேச்சு குறித்து நடிகை கஸ்தூரி மீது காவல்நிலையத்தில் புகார்

தெலுங்கு இன மக்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக நடிகை கஸ்தூரி மீது தேனி காவல்நிலையத்தில பெண்கள் புகார் மனு அளித்துள்ளனர். இந்து மக்கள் கட்சி சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கூட்டத்தில் கஸ்தூரியின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. ...

துப்பாக்கியைக் காட்டி மனைவியை மிரட்டிய அ.தி.மு.க பிரமுகர் கைது

திருவாரூரில் மனைவியிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய அதிமுக பிரமுகரை போலீசார் கைது செய்துள்ளனர். பாலாஜி என்ற அந்த நபரின் தந்தை, தனது பேத்தியிடமே தவறாக நடந்து கொள்ள முயன்றதாக பாலாஜியின் மனைவி கொடுத்த புகாரின் பேரில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கை...

திருச்செந்தூர் முருகன் கோவில் கந்த சஷ்டி திருவிழாவின் 3ஆம் நாள்

திருச்செந்தூர் முருகன் கோவில் கந்த சஷ்டி திருவிழாவின் மூன்றாம் நாளான நேற்று இரவு, சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானை அம்பாளுடன் தங்கத்தேரில் திருவீதி உலாவரும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. பக்தர்களின் கோலாட்டம், கும்மியாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு மத்தியில்...

நடிகை கஸ்தூரி இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டத்தில் பேசியது என்ன ?

சென்னை எழும்பூரில் இந்து மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கடந்த 3 ஆம் தேதி பங்கேற்று பேசிய நடிகை கஸ்தூரி,  தெலுங்கு பேசுபவர்களை தவறாக கூறியதாக கண்டனம் எழுந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அவர், தெலுங்கு மக்களை நாம் அப்படி பேசியதாக...