​​
Polimer News
Polimer News Tamil.

இந்திய அரசு இலங்கைக்கு மேலும் 40 ஆயிரம் டன் டீசல் அனுப்பிவைப்பு

இலங்கைக்கு இந்தியா மேலும் 40 ஆயிரம் மெட்ரிக் டன் டீசலை அனுப்பிவைத்தது. இந்தியா அனுப்பிவைத்த டீசல் இன்று கொழும்பு வந்தடைந்ததாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. கடந்த புதன்கிழமை தமிழக அரசு சார்பில் முதற்கட்டமாக இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்ட சுமார் 9 கோடி ரூபாய் மதிப்பிலான 9,500...

இந்தியாவில் ஐபோன் தயாரிப்பை அதிகரிக்க ஆப்பிள் திட்டம்

இந்தியாவிலும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் ஐபோன் உற்பத்தியை அதிகரிக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சீனாவில் கடுமையான கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் உள்ளதால், பிற நாடுகளில் உள்ள ஆலைகளில் உற்பத்தியை அதிகரிக்கும்படி ஆப்பிள் நிறுவனம் அதன் ஒப்பந்த நிறுவனங்களிடம் கூறியுள்ளது. கொரோனா சூழலில் கடந்த...

தருமபுரம் ஆதீன பட்டின பிரவேச நிகழ்ச்சி... பாதுகாப்பு பணியில் 600-க்கும் மேற்பட்ட போலீசார்..!

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன பட்டினபிரவேச நிகழ்ச்சி ஒரு ஆன்மீக விழா என்றும், அதில் அரசியல் நுழையாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கேட்டுக்கொண்டுள்ளார். 27 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டம் இன்று தொடங்கி வைக்கப்படும்...

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிர் நீத்தவர்களுக்கான 4-ம் ஆண்டு நினைவு தினம்: பாதுகாப்பு பணியில் 2,500 போலீசார்..!

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிர் நீத்தவர்களுக்கான 4-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், பாதுகாப்புக்காக 2,500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அஞ்சலி செலுத்த வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதி இல்லை என தெரிவித்துள்ள போலீசார், நகரின் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைச் சாவடிகள்...

கேன்ஸ் திரைப்பட விழா: மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பிரான்ஸ் பயணம்!

75-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்பதற்காக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பிரான்ஸ் சென்றுள்ளார். அங்கு அவரை பிரான்ஸ் நாட்டிற்கான இந்திய தூதர் ஜாவேத் அஷ்ரப் வரவேற்றார். அப்போது இருவரும் இந்தியா-பிரான்ஸ் இரு நாட்டு உறவுகள், கேன்ஸ் திரைப்பட விழா உள்ளிட்ட பல்வேறு காரியங்கள் குறித்து...

விடுமுறை தினம்: காசிமேடு மீன் சந்தையில் குவிந்த மக்கள்...வரத்து குறைவால் மீன் விலை இருமடங்காக உயர்வு.!

சென்னை காசிமேட்டில், மீன்களின் விலை இருமடங்காக உயர்ந்த போதிலும், பொதுமக்கள் அவற்றை வாங்கிச் சென்றனர். கடந்த ஏப்ரல் 15-ம் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதையடுத்து, மீன் வரத்து குறைந்துள்ளது. விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லாத நிலையில், பைபர் படகுகளில் பிடித்து வரப்படும்...

கன்னியாக்குமரி மாவட்டத்தில் தொடரும் கனமழை...திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிக்களுக்கு குளிக்கத் தடை!

திற்பரப்பு அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கன்னியாக்குமரி மாவட்டத்தில் ஒரு வாரத்திற்கும் மேலாக தொடரும் மழையினால், பேச்சிப்பாறை அணையிலிருந்து ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. கோதையாற்றில் ஏற்பட்ட  வெள்ளப்பெருக்கினால், திற்பரப்பு அருவியில் அதிக அளவில் தண்ணீர்...

தொடர்ந்து உயர்ந்து வரும் மேட்டூர் அணையின் நீர்மட்டம்.. முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்ப்பு..!

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117 அடியை நெருங்கியது. விரைவில் அணை முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேட்டூர் அணைக்கு காலை நிலவரப்படி,  விநாடிக்கு 25 ஆயிரத்து  161 கன அடி...

சொகுசு காரில் வைத்திருந்த பணப்பையை மர்ம நபர் திருடிச் செல்லும் சிசிடிவி வெளியீடு

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் சொகுசு காரில் வைத்திருந்த பணப்பையை மர்ம நபர் ஒருவர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி  வெளியாகி உள்ளது. சென்னை வியாசர்பாடி ஆர்கேபி நகரை சேர்ந்த சரத் என்பவர் குடும்பத்தினருடன் கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள கோவில்களை பார்ப்பதற்காக காரில்...

தனியார் எண்ணெய் தயாரிப்பு நிறுவனத்தில் தீ விபத்து.. ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்..!

விருதுநகரில் தனியார் எண்ணெய் தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இயந்திரங்கள், எண்ணெய் உட்பட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. பாண்டியன் நகரில் அப்பண்ணசாமி என்பவருக்குச் சொந்தமான கோகிலா எண்ணெய் ஆலையில் நேற்றிரவு 9 மணி அளவில்...