​​
Polimer News
Polimer News Tamil.

கருணை அடிப்படையில் நியமனம் கோரும் மனுக்கள்.. 6 மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் - உச்சநீதிமன்றம் உத்தரவு..!

கருணை அடிப்படையில் நியமனம் கோரும் மனுக்கள் மீது 6 மாதங்களுக்குள் முடிவு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கருணை அடிப்படையில் நியமனம் கோரும் மனு ஒன்றை ஒடிசா அரசு நிராகரித்தது விதிகளின்படி செல்லும் என்று அம்மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதனை எதிர்த்த...

டெக்ஸாஸ் தொடக்கப்பள்ளியில் துப்பாக்கிச் சூடு.. 18 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு..!

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் பள்ளிக்குள் நுழைந்த 18 வயது இளைஞர் ஒருவர் சரமாரியாக சுட்டத்தில் 18 குழந்தைகள் மற்றும் ஆசிரியர் உள்பட மேலும் 3 பேர் உயிரிழந்தனர். சுட்ட நபரும் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டான்.பைக்கில் இருந்து இறங்கிய அந்த இளைஞன் ராப் தொடக்கப்பள்ளியில்...

ரஷ்ய அதிபர் புதினைக் கொல்ல 2 மாதங்களுக்கு முன்பு சதித்திட்டம்? உக்ரைன் உளவுத்துறை தலைவர் பரபரப்பு தகவல்

ரஷ்ய அதிபர் புதினை படுகொலை செய்ய இரண்டு மாதங்களுக்கு முன்பு சதி நடைபெற்றதாக உக்ரைன் பாதுகாப்புத் துறை அதிகாரியான கைரிலோ புதானோவ் தெரிவித்துள்ளார். இந்த சதியில் இருந்து புதின் உயிர் தப்பியதாகவும் அவர் கூறியுள்ளார். பத்திரிகைக்கு பேட்டியளித்த உக்ரைன் உளவுத்துறை தலைவர் கைரிலோ,...

கதவை திறந்து வைத்து வீட்டு வேலை பார்க்கும் இல்லத்தரசியா உஷார்..! பாலியல் அரக்கர்கள் அட்டூழியம்..!

சென்னையில் கதவுகளை திறந்து போட்டபடி வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்ட இருவர் போலீஸ் பிடியில் சிக்கி உள்ளனர். அத்துமீறுவதோடு இல்லாமல் பெண்களை வீடியோ எடுத்து வைத்து பிளாக்மெயில் செய்யும் கும்பலின் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த...

இலங்கையின் பணவீக்கம் 40 சதவீதமாக அதிகரிக்கும் என்று ரணில் விக்ரம்சிங்கே எச்சரிக்கை

இலங்கையின் பணவீக்கம் 40 சதவீதமாக அதிகரிக்கும் என்று அந்நாட்டுப் பிரதமர் ரணில் விக்ரம்சிங்கே எச்சரித்துள்ளார். பெட்ரோல் டீசல் உள்பட அடிப்படை தேவைகளை இறக்குமதி செய்ய அந்நியச் செலாவணி போதாமல் தடுமாறும் இலங்கையில் விலைவாசி கடுமையாக உயர்ந்து வருகிறது.  மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்ததையடுத்து புதிய...

17 ஆண்டுகளாக மகனை தேடி வந்த தந்தை.. கடைசி வரை முகத்தை பார்க்காமலேயே விபரீத முடிவு..!

காணாமல் போன மகனை 17 ஆண்டுகளாக தேடி வந்த தந்தை மகன் முகத்தை கடைசி வரை பார்க்காமலேயே உயிரை மாய்த்து கொண்ட சோகம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்தவர்கள் ராஜூ-மினி தம்பதி. இவருக்கு ராகுல் என்ற மகன் உண்டு. மகன்...

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளால் சுடப்பட்ட காவலர் உயிரிழப்பு... காப்பாற்ற சென்ற 9 வயது மகளுக்கு பலத்த காயம்

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளால் சுடப்பட்ட காவலர் சைபுல்லா காதிரி கொல்லப்பட்ட நிலையில் அவரை காப்பாற்ற முயன்ற அவருடைய 9 வயது  மகளும் தீவிரவாதிகளால் சுடப்பட்டு படுகாயம் அடைந்தாள். ஸ்ரீநரின் சோவ்ரா பகுதியில் தந்தையின் மார்போடு இறுக அணைத்து காப்பாற்ற முயன்ற சிறுமியும் படுகாயம்...

திகார் சிறையில் சித்ரா ராமகிருஷ்ணாவிடம் அமலாக்கத்துறையினர் பல மணி நேரம் விசாரணை

டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சித்ரா ராமகிருஷ்ணாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று பல மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். அவருடைய வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. சிபிஐயால் வழக்குத் தொடரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அவரிடம் அமலாக்கத்துறையும் தனியாக விசாரணை நடத்தி வருகிறது. தேசியப் பங்குச்...

இவரு அட்வகேட்டா..? இல்ல அண்டர்டேக்கரா..? இளைஞரை அடித்து உதைத்த காட்சிகள்..!

நெல்லையில் இடம் தொடர்பான பிரச்சனையில் இருதரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலின் போது வழக்கறிஞர், எதிர் தரப்பை சேர்ந்தவரை மண்வெட்டியால் வெட்ட முயன்று சரமாரியாக தாக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளது. நெல்லை டவுன் மாதா மேல தெருவை சேர்ந்தவர் உமா மகேஸ்வரி. இவரது வீட்டின் அருகில்...

மெக்சிகோவில் உணவகம், பார்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலி

மெக்சிகோவில் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். மெக்சிகோவின் செலாயா பகுதியில் உள்ள உணவகம் மற்றும் மதுபான கேளிக்கை கூடத்தில் நுழைந்த மர்ம நபர்கள் திடீரென கண்மூடித்தன தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் 7 பெண்களும், 3 ஆண்களும்...