​​
Polimer News
Polimer News Tamil.

சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இரு வீராங்கனைகளுக்கு ரூ.2 கோடி பரிசு அறிவிப்பு!

துருக்கியில் நடைபெற்ற 12-வது சர்வதேச மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தெலுங்கானாவை சேர்ந்த நிகத் ஜரீனுக்கு 2 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார். இதேபோல் ஐ.எஸ்.எஸ்.எப் ஜூனியர் உலகக் கோப்பையில்...

சாலையில் 8 போட்டால் எமலோகம் கன்பார்ம்.. போதையால் மாறிய பாதை..!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே குடிபோதையில் இருசக்கர வாகனத்தை தாறுமாறாக ஓட்டி சென்ற வாலிபர்கள் லாரியில் மோதிய வீடியோ வெளியாகி உள்ளது. போதையால் பாதைமாறி சாலையில் எட்டுபோட்டு எமனை அழைத்த சம்பவத்தின் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு... சேலம் மாவட்டம்...

கல்குவாரியில் உள்ள குட்டையில் குளிக்கச்சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி.!

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே கல்குவாரி குட்டையில் குளிக்கச்சென்ற மூதாட்டி, பேரக்குழந்தைகள் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். பெருமுக்கல் பகுதியை சேர்ந்த புஷ்பா, தனது மகனின் குழந்தைகளான 16 வயதான வினோதினி 14 வயதான ஷாலினி...

கஞ்சா போதையில் பட்டாக்கத்தியுடன் குடியிருப்பு பகுதியில் ரகளை-2 புள்ளிங்கோக்கள் அரெஸ்ட்

சென்னையை அடுத்த சேலையூரில் கஞ்சா போதையில் பட்டாக்கத்தியால் பொதுமக்களை தாக்கிய வழக்கில், தேடப்பட்டு வந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். நேற்று முன்தினம் முத்தாலம்மன் கோவில் தெரு பகுதிக்கு வந்த 12பேர், கிருஷ்ணமூர்த்தி என்பவரை தாக்கியதோடு அப்பகுதியைச் சேர்ந்தவர்களையும் தாக்கி அராஜகத்தில்...

சாலையில் நடந்து சென்ற எஸ்.ஐ., மனைவியிடம் நகை பறிக்க முயற்சி -24 மணி நேரத்திற்குள் கைது செய்த காவல்துறை

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் சாலையில் நடந்து சென்ற எஸ்.ஐ மனைவியிடம் நகையை பறிக்க முயன்ற கொள்ளையனை சிசிடிவிக் காட்சிகளை கொண்டு போலீசார் 24மணி நேரத்தில் கைது செய்தனர். செய்யாறு பகுதியைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் ராஜேந்திரனின் மனைவி அனுசியா, நேற்றிரவு திருமண...

கொச்சியில் தனியார் பேருந்துகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்த உயர்நீதிமன்றம்!

கொச்சியில் தனியார் பேருந்துகள் சாலையின் இடது ஓரத்தில் மட்டுமே செல்ல வேண்டும், ஒலி எழுப்பக் கூடாது, மற்ற வாகனங்களை முந்திச் செல்லக் கூடாது எனக் கேரள உயர் நீதிமன்றம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே நிறுத்திப் பயணிகளை ஏற்றிச் செல்லும்படி போக்குவரத்துத்துறை...

நட்சத்திர விடுதிகளில் உள்ள சமையல் கூடத்தில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

புதுச்சேரியில், நட்சத்திர விடுதிகளில் உள்ள சமையல் கூடத்தை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். வழுதாவூர் காலை, காமராஜர் சாலை, அண்ணா சாலை ஆகிய இடங்களில் உள்ள பல்வேறு நட்சத்திர ஓட்டல்களின் சமையல் கூடத்தை ஆய்வு செய்த அதிகாரிகள், குளிர் சாதணப் பெட்டிகளில்...

மகனின் ஆசையை நிவர்த்தி செய்வதற்காக சிறிய ரக கே.டி.எம் பைக்கை உருவாக்கிய தந்தை

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே, மகனின் ஆசையை நிவர்த்தி செய்வதற்காக மெக்கானிக் ஒருவர் கே.டி.எம் பைக் போன்ற சிறிய ரக பைக்கை உருவாக்கியுள்ளார். பைக் மெக்கானிக்கான தங்கராஜ் என்பவரது மகன் மோகித், சாலையில் சென்ற விலையுயர்ந்த கே.டி.எம் பைக்கை பார்த்து அதே போன்ற...

சாலையோரம் உறங்கிக் கொண்டிருந்த நபரின் செல்போனை திருடிய போர்வை திருடன்

திருப்பூரில், மதுபோதையில் சாலையோரம் உறங்கிக் கொண்டிருந்த நபரின் செல்போனை, அருகில் போர்வையை போர்த்திக் கொண்டு படுத்த நபர் திருடிச் சென்ற வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. பல்லடம் பேருந்து நிலையத்தில் இருக்கும் அம்மா உணவகம் அருகில் மதுபோதை தலைக்கேறிய நிலையில் ஒருவர் உறங்கி...

வேலூர் விமான நிலைய விரிவாக்க பணியை விரைந்து முடிக்க உத்தரவு.!

வேலூர் விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு, மேலும் 11 ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தபடவுள்ளத்தாக அம்மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் மாதத்திற்குள் விமான நிலைய விரிவாக்க பணிகளை முடிக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்த அவர், விமான ஓடுதளத்திற்காக கையகப்படுத்தப்படும் விவசாய நிலங்களை...