​​
Polimer News
Polimer News Tamil.

உலக மிதிவண்டி தினம்: மகாத்மா காந்தி மிதிவண்டி ஓட்டிச் செல்லும் படத்தை பதிவிட்டு பிரதமர் மோடி ட்வீட்.!

உலக மிதிவண்டி நாளையொட்டிப் பிரதமர் டுவிட்டரில் விடுத்துள்ள செய்தியில், மகாத்மா காந்தி மிதிவண்டி ஓட்டிச் செல்லும் படத்தை வெளியிட்டுள்ளார். சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை எனத் தலைப்பிட்டு மகாத்மா காந்தியின் படத்தைப் பதிவிட்டுள்ளார். நீடித்த, நலமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற ஊக்கமளிப்பதில் மகாத்மா காந்தியைவிடச் சிறந்தவர்...

போதை மறுவாழ்வு மையத்தின் ஜன்னலை உடைத்து 17 பேர் தப்பியோட்டம்.!

சென்னை அடுத்த திருவேற்காட்டில் உள்ள போதை மறு வாழ்வு மையத்தில் இருந்து 17 பேர் தப்பி சென்றதாக கூறப்படும் நிகழ்வு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேல் அயனம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் போதை மறுவாழ்வு மையத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்தவர்களில்...

உணவகத்தில் நுகர்வோரிடம் சேவைக் கட்டணம் பெறுவதைத் தடுக்க நடவடிக்கை - மத்திய அரசு

உணவகங்களில் வாடிக்கையாளர்களிடம் சேவைக் கட்டணம் பெறுவதைத் தடுக்க விரைவில் விதிமுறைகள் வகுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நுகர்வோர் விவகாரங்கள் துறையின் வழிகாட்டுதலின்படி உணவின் விலை மற்றும் வரிகளை மட்டுமே வாடிக்கையாளரிடம் பெறலாம் என்றும், வாடிக்கையாளரின் ஒப்புதல் இன்றி அவரிடம் சேவைக்கட்டணம் பெறுவது...

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் - வானிலை ஆய்வு மையம்

குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலக் கீழடுக்குச் சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக இன்றும் நாளையும் தமிழகத்தின் 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜூன் 5, 6, 7 ஆகிய நாட்களில்...

துபாய் புர்ஜ் கலீஃபாவிற்கே டஃப் கொடுக்க போகும் சவூதி அரேபியா.. இவ்வளவு அடி உயரமா..?

சவூதி அரேபியா 500 பில்லியன் டாலர் செலவில் மெகா மேம்பாடு திட்டத்தில் உலகின் மிகப்பெரிய கட்டிடங்களை கட்ட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபா தற்போது 828 மீட்டர் உயரத்தில் மனிதனால் உருவாக்கப்பட்ட உலகின் மிக உயரமான கட்டிடமா இருக்கும்...

வழக்கு விசாரணைக்கு ஆஜராக ராகுல் காந்திக்கு புதிய சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை.!

நேஷனல் ஹெரால்டு பண மோசடி வழக்கு தொடர்பான விசாரணைக்கு, வரும் ஜூன் 13-ம் தேதி காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ஆஜராகக் கோரி, அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. ஏற்கனவே கடந்த ஜூன் 2-ம் தேதி விசாரணைக்கு ஆஜாராக சம்மன் அனுப்பிய நிலையில், அவர்...

இந்தியாவில் 3 மாதங்களுக்கு பின் அதிகரித்த தினசரி கொரோனா பாதிப்பு..!

3 மாதங்களுக்கு பின் இந்தியாவில்  கொரோனா பாதிப்புகள் 4,000 ஐ கடந்துள்ளது. கடந்த 3 மாதங்களாக தினசரி கொரோனா பாதிப்புகள் பெரும்பாலும் 3,000 க்கும் குறைவாக இருந்து வந்த நிலையில், புதன்கிழமை திடீரென 3,712 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று அந்த...

உத்தரக்கண்ட் இடைத்தேர்தலில் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி வெற்றி.!

உத்தரக்கண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி சம்பாவத் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் 55 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால் பாஜக தொண்டர்கள் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இசைக் கருவிகளை முழக்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.  ...

உலக சைக்கிள் தினத்தை ஒட்டி நாடு தழுவிய அளவில் சைக்கிள் பேரணி..!

உலக சைக்கிள் தினத்தை ஒட்டி இன்று நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் சைக்கிள் பேரணிகள் நடைபெறுகின்றன. டெல்லி தயான் சந்த் மைதானத்தில் இருந்து சைக்கிள் பேரணிகளை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் துவக்கி வைத்தார். 750...

வெளிநாட்டு பயணிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்தியது தென் கொரியா..!

தென்கொரியாவுக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு விதிக்கப்பட்ட பயணக்கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இது குறித்து பேசிய தென்கொரிய பிரதமர் ஹான் டக்-சூ, தடுப்பூசி செலுத்தாமல் தென்கொரியா வரும் வெளிநாட்டினருக்கு விதிக்கப்பட்ட 7 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல் நடைமுறை வரும் ஜூன் 8ம்...