​​
Polimer News
Polimer News Tamil.

லக்னோ பாஜக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. புதுக்கோட்டையை சேர்ந்த ராஜா முகமது என்பவர் கைது.!

உத்தர பிரதேசத்தின் லக்னோவில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த புகாரில் அம்மாநில காவல்துறையினர் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவரை கைது செய்தனர். திருக்கோகர்ணத்தை சேர்ந்த ராஜா முகமது என்பவர், உத்தர பிரதேச காவல்துறையினருக்கு வாட்ஸ் அப் மூலம் மிரட்டல் விடுத்துள்ளார். இதனை அடுத்து...

முன்னாள் காவல்துறை அதிகாரியை கத்தியால் குத்தி கொலை செய்த 4 போதை ஆசாமிகள் கைது.!

மதுரை மாவட்டம் சோழவந்தானில், மது அருந்த பணம் தர மறுத்த ஓய்வுபெற்ற காவல் அதிகாரியை கத்தியால் குத்தி கொலை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். ஓய்வுபெற்ற காவல் சார்பு ஆய்வாளரான ஜோதி, ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவில் காவலாளியாக...

தவறான திசையில் செல்லும் தாலிபான் அரசு.. சர்வதேச சமூகம் உணர்த்த வேண்டும்.. ஜெர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் பேச்சு.!

ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசு தவறான திசையில் செல்வதாகவும் இதனை சர்வதேச சமூகம் சொல்ல வேண்டும் என்றும் ஜெர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் அன்னலெனா பேர்பாக் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் சென்றுள்ள அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தாலிபான்களால் தங்கள் அரசாங்கம் தூக்கி எறியப்பட்டது ஆப்கானிஸ்தான் மக்களின் தவறு...

எல்லாத்துக்கும் இனி ஒரே சார்ஜர் தான்... தீர்மானம் நிறைவேற்றிய ஐரோப்பிய ஒன்றியம்..!

2024 ஆம் ஆண்டு முதல் ஐரோப்பா முழுவதும் ஒரே மாதிரியான செல்போன் சார்ஜர்களை பயன்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஆப்பிள் போன்கள் மற்றும் ஆண்டிராய்டு போன்களுக்கு வெவ்வேறு சார்ஜர்கள் பயன்படுத்தப்படுவதால் வாடிக்கையாளர்கள் விதவிதமான சார்ஜர்களை வாங்க வேண்டி உள்ளது. இதனால் ஏற்படும் பண விரயத்தை...

விசாரணை கைதி மரணமடைந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 5 போலீசாரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி.!

சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 காவலர்களின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணை ஆரம்பக் கட்டத்தில் உள்ளதால் அவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என சிபிசிஐடி தெரிவித்ததை ஏற்று...

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு சொந்தமான இடங்களில் ரூ.2.82 கோடி பறிமுதல்..!

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் மற்றும் அவரது உதவியாளருக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் இரண்டு கோடியே 82 லட்சம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது. நேற்று நடத்தப்பட்ட சோதனையில் 1800 கிராம் எடையுள்ள 133 தங்க நாணயங்களும்...

மாமல்லபுரத்தில் நாளை மறுநாள் நடைபெறுகிறது நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்..!

நடிகை நயன்தாராவுக்கும், தமக்கும் நாளை மறுநாள் மகாபலிபுரத்தில் திருமணம் நடைபெறவுள்ளதாக இயக்குநர் விக்னேஷ் சிவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் விக்னேஷ் சிவன், முதலில் திருப்பதியில் திருமணம் செய்துக்கொள்ள திட்டமிட்டதாகவும், தவிர்க்க இயலாத காரணத்தால் மகாபலிபுரத்தில் குடும்பத்தினர், நண்பர்கள்...

52 வயது பெண்ணை தண்டவாளத்தில் தள்ளி விட்ட இளைஞர்.. தள்ளிவிட்டவரை பற்றி தகவல் அளிப்பவருக்கு 3,500 டாலர் வெகுமதி அறிவிப்பு..!

அமெரிக்காவில், ரயில்வே தண்டவாளத்தில் 52 வயது பெண்ணை இளைஞர் ஒருவர் தள்ளி விட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அவரை பற்றிய தகவல் அளிப்போருக்கு இந்திய மதிப்பில் சுமார் 2 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் வெகுமதியாக வழங்கப்படும் என...

இங்கிலாந்தில் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை என்ற திட்டம் அமல்..!

இங்கிலாந்தின் பல்வேறு நிறுவனங்களில் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை என்ற திட்டம் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 6 மாதங்களுக்கு நீட்டிக்கும் இத்திட்டத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 70 நிறுவனங்களும் சுமார் 3 ஆயிரத்து 300 ஊழியர்களும் பங்கேற்றுள்ளனர். வாரத்தில் 4...

6.5 கி.மீ தூரத்திற்கு புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடிகள்.. அகற்றும் பணியில் ஈடுபட்ட ரஷ்ய வீரர்கள்..!

டொனட்ஸ்க் பகுதியில் புதைத்து வைக்கப்பட்டுள்ள கன்னி வெடிகளை ரஷ்ய வீரர்கள் அகற்றும் காட்சிகளை ரஷ்ய அவசரகால அமைச்சகம் வெளியிட்டுள்ளது. தன்னாட்சி பெற்ற டொனட்ஸ்க் பகுதியில், சுமார் 6.5 கிலோமீட்டர் தூரத்திற்கு புதைத்து வைக்கப்பட்ட கன்னி வெடிகளை அகற்றும் பணியில், ரஷ்ய வீரர்கள் ஈடுபட்டனர். இதில்,...