​​
Polimer News
Polimer News Tamil.

தமிழ்நாட்டில் கடைகள், வணிக நிறுவனங்களை 24 மணி நேரம் திறக்க அனுமதி

தமிழ்நாட்டில் 10 நபர்களுக்கு மேல் பணிபுரியும் கடைகள், வணிக நிறுவனங்களை 24 மணி நேரமும் திறக்க அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. ஜூன் 5 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் இந்த உத்தரவு அடுத்த 3 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் என்று அரசிதழில்...

ரஷ்யாவை விட்டு வெளியேறுவதாக ஐபிஎம் அறிவிப்பு

அமெரிக்காவைச் சேர்ந்த கணினி நிறுவனம் ஐபிஎம் ரஷ்யாவில் தனது தொழிலைவிட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளது. உக்ரைன் மீதான தாக்குதலைக் கண்டித்து ரஷ்யாவில் மார்ச் முதல் தனது செயல்பாட்டை நிறுத்தி வைத்திருந்தது. அதேநேரத்தில் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கி வந்தது. இந்நிலையில் ஐபிஎம் தலைமைச் செயல் அதிகாரி...

விமான நிலையங்கள் மற்றும் விமானத்திற்குள் பயணிகள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் - விமானப் போக்குவரத்து இயக்குநரகம்

விமான நிலையங்கள் மற்றும் விமானத்திற்குள் பயணிகள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்று விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டி, உரிய நடவடிக்கை எடுக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, விமான பயணிகளுக்கான...

கண்ணகி - முருகேசன் ஆணவ கொலை வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே 2003 ஆம் ஆண்டு நிகழ்ந்த கண்ணகி - முருகேசன் ஆணவ கொலை வழக்கில் கண்ணகியின் சகோதரர் மருது பாண்டியனுக்கு சிறப்பு நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேல்முறையீட்டு வழக்கை...

விக்ரம் திரைப்படத்தில் நடித்த நடிகர் சூர்யாவிற்கு ரோலக்ஸ் கை கடிகாரத்தை பரிசளித்த கமல்ஹாசன்

விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகர் சூர்யாவிற்கு, ரோலக்ஸ் கை கடிகாரத்தை கமல்ஹாசன் பரிசளித்தார். திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் கமல்ஹாசன், இயக்குனர் லோகேஷ் கனகராஜூக்கு Lexus காரையும், உதவி இயக்குநர்கள் 13 பேருக்கு TVS Apache RTR 160...

பைக்கில் 3 பேர் பயணம் : தடுத்து நிறுத்திய போலீசாரை நண்பருடன் சேர்ந்து சரமாரியாக தாக்கிய பெண்கள்

டெல்லியில் இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணம் செய்ததால் தடுத்து நிறுத்திய போலீசாரை இரு இளம் பெண்களும் அவர்களது நண்பரும் கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. நம்பர் பிளேட் இல்லாத இருசக்கர வாகனத்தில் அவர்கள் பயணம் செய்ததுடன், தவறான பாதையில் சென்றுள்ளனர். இதனால்...

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆய்வு செய்ய தீட்சிதர்கள் ஒத்துழைப்பு தரவில்லை என அதிகாரிகள் குற்றச்சாட்டு

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தொடர்ந்து இரண்டாவது நாளாக ஆய்வுக்கு சென்ற அதிகாரிகளுக்கு தீட்சிதர்கள் ஒத்துழைப்பு தரவில்லை என விசாரணை குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிதம்பரம் நடராஜர் கோயிலின் வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்ய இந்து சமய அறநிலையத் துறை சார்பில் குழு...

நடனக் கலைஞர்களுடன் கைகோத்து நடனமாடிய மம்தா பானர்ஜி

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஒரு திருமண விழாவில் நடனக் கலைஞர்களுடன் இணைந்து நடனமாடியுள்ள வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. அலிப்பூர்துவாரில் நடைபெற்ற திருமண விழாவுக்குச் சென்ற முதலமைச்சர் மம்தா பானர்ஜி மேடையில் நடனமாடிய கலைஞர்களுடன் கைகோத்து நடனமாடினார்.   #WATCH West Bengal CM...

அடுத்தவர் நிலத்தை ஆட்டையை போட்ட சார்பதிவாளருக்கு ஷாக்..! அபகரித்த நிலத்துக்கு ஈடாக அரசு அலுவலகம்.!

அடுத்தவருக்கு சொந்தமான இரண்டே கால் ஏக்கர் நிலத்தை எந்த ஒரு ஆவணமும் இன்றி வேறு நபர் பெயரில் பத்திரபதிவு செய்து கொடுத்த சார்பதிவாளருக்கு ஷாக் கொடுக்கும் வகையில் அரசு அலுவலகங்களை தனது பெயருக்கு எழுதி தரக்கேட்டு நிலத்துக்கு சொந்தக்காரர் பேணர் வைத்ததால்...

தொழுவத்தில் இருந்து தப்பித்து கட்டுக்கடங்காமல் நெடுஞ்சாலையில் ஓடிய மாடு : குதிரையில் சென்று பிடித்த மீட்புக்குழு

அமெரிக்காவின் ஓக்லஹாமா நகரத்தில் தொழுவத்தில் இருந்து தப்பித்த மாடு ஒன்று நெடுஞ்சாலை வழியாக ஓட்டம் பிடித்தது. ஓக்லஹாமா - பென்சில்வேனியா நெடுஞ்சாலை எப்போதும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும். அந்த சாலை வழியே வாகனங்களுக்கு மத்தியில் கட்டுக்கடங்காமல் அந்த மாடு வேகமாக ஓடிக்கொண்டே இருந்தது....