​​
Polimer News
Polimer News Tamil.

பாரீஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை வெளியேற்ற டிரம்ப் திட்டம்..

காலநிலை மாற்றம் தொடர்பான பாரீஸ் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளில் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப்பின் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். பாரீஸ் காலநிலை ஒப்பந்தம், பொருளாதார ரீதியாக அமெரிக்காவுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக டிரம்ப் கருதுகிறார். இதனால் அந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய பிறகு...

திருவள்ளூர் நகராட்சியில் குரங்குகளின் அட்டகாசம்.. 30க்கும் மேற்பட்டவைகளை பிடித்து காட்டிற்குள் விட்ட வனத்துறையினர்..

திருவள்ளூர் நகராட்சியில் குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதால், நகராட்சி சார்பில் அளித்த புகார் அடிப்படையில் வனத்துறையினர் 30க்கும் மேற்பட்ட குரங்குகளை பிடித்து காட்டிற்குள் விட்டனர். திருவள்ளூர் நகராட்சி நீர் ஏற்றும் அறையின் அருகே குழந்தைகளை துன்புறுத்துவது, கையில் எடுத்துச் செல்லும் பொருட்களை பிடுங்குவது...

விருதுநகர் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு

அரசு திட்டப்பணிகளின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுநகர் மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டார். சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்றடைந்த முதலமைச்சர், அங்கிருந்து சாலை மார்க்கமாக விருதுநகர் சென்றார். அங்கு இருமருங்கிலும் திரண்டிருந்த தி.மு.க.வினர் கட்சிக்கொடிகளை...

மிட்டாய் கடையில் வேலை பார்த்து வந்த 3 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

சென்னை கொடுங்கையூரில் உள்ள ஒரு மிட்டாய் கடையில் வேலை பார்த்துவந்த குழந்தை தொழிலாளர்கள் 3 பேரை தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 12, 16 மற்றும் 17 வயதிலான அந்தச் சிறுவர்களை பணியில் அமர்த்தியதாக கூறப்படும்...

விஜயகாந்த் நடித்த படத்தின் பாடலை பாடிய 3 சிறுமிகள் பாடலை கேட்டு கண்கலங்கிய பிரேமலதா..

மதுரையில் கட்சி நிர்வாகி இல்ல திருமணத்தில் பங்கேற்க வந்த பிரேமலதாவை சந்தித்து, தேமுதிக தெற்கு மாவட்டச் செயலாளர் மணிகண்டனின் 3 மகள்கள் விஜயகாந்த் நடித்த என் ஆசை மச்சான் படத்தில் இடம்பெற்ற ஆடியிலே சேதி சொல்லி பாடலை கோரசாக பாடினர். இதை...

பேருந்து நிலையத்துக்குள் ஸ்கூட்டரில் வந்து மற்ற வாகனங்களை வழிமறித்து அட்ராசிட்டி செய்தவருக்கு ரூ.3,500 அபராதம்

ஈரோடு பேருந்து நிலையத்துக்குள் இருசக்கர வாகனத்தில் சென்றதற்காக அபராதம் விதித்ததால் கோபமடைந்த ஒருவர், அவ்வழியாகச் சென்ற மற்ற வாகனங்களை வழிமறித்து அபராதம் விதிக்கச் சொல்லி போலீசாரை தொந்தரவு செய்தார். வெங்கட் என்ற அந்த நபரை அங்கிருந்து செல்லுமாறு போலீசார் பலமுறை அறிவுறுத்தியும் அவர்...

நாளொன்றுக்கு 1 லட்சம் லிட்டர் குடிநீரை திருடிய EGS தனியார் கல்லூரி நிர்வாகம் - ரூ.2 கோடி அபராதம்

நாகப்பட்டினம் அருகே, கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில், ஓட்டைப் போட்டு, குடிநீரை திருடிய EGS பிள்ளை என்ற தனியார் கல்லூரி நிர்வாகத்திற்கு 2 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாத காலமாக நாகப்பட்டினம் நகராட்சி மற்றும் ஒன்றிய பகுதிகளில்...

அரிசி ஆலை உரிமையாளரை கடத்திய 4 நபர்கள் செல்போன் சிக்னல் மூலம் தொடர்ந்து சென்று கைது..

தென்காசி மாவட்டம், கடையம் அருகே அரிசி ஆலை உரிமையாளரை காரில் கடத்திய நபர்களை செல்போன் சிக்னல் மூலம் பின்தொடர்ந்து சென்று பெரம்பலூரில் சுற்றி வளைத்து பிடித்ததாக தனிப்படை போலீசார் தெரிவித்துள்ளனர். வெங்கடம்பட்டியில் அரிசி ஆலை நடத்தி வரும் உதயகுமார், கடலூர் மாவட்டம் பண்ருட்டியை...

வள்ளியாறு கிளை கால்வாயில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் இடிந்து விழுந்த சுவர்...

கன்னியாகுமரி மாவட்டம், திங்கள்நகர் பகுதியில் வள்ளியாறு கிளைக் கால்வாயில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மண் அரிப்பு ஏற்பட்டு வீட்டின் பக்கவாட்டுச்சுவர் உடைந்து சேதமடைந்தது. மேலும் வீடுகள் பாதிக்கக்கூடிய அபாயம் உள்ள நிலையில், கால்வாயின் பக்கவாட்டுச் சுவர்களை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி...

ரூ.7.32 கோடி மதிப்பில் கட்டப்பட்ட உயர்மட்ட பாலத்தை ஆய்வுசெய்தார் அமைச்சர் எ.வ.வேலு

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே சுமார் ஏழரை கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தை அமைச்சர் ஏ.வ.வேலு ஆய்வு செய்தார். பாலத்தின் தடுப்புச்சுவரின் உறுதித்தண்மையை தர ஆய்வு கருவியை வைத்து சோதனையிட்ட அவர், சிறு வளைவுகளுடன் காணப்பட்ட தடுப்புச்சுவரை நேராக...