​​
Polimer News
Polimer News Tamil.

நடந்து சென்ற பெண்ணிடம் தங்க நகையைப் பறித்த பைக் கொள்ளையர்கள்

திருத்தணியில், வீட்டருகே நடந்து சென்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த கொள்ளையர்கள் ஆறு சவரன் தங்க நகையைப் பறித்துச் சென்றனர்.  சிசிடிவி பதிவுகளை வைத்து கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்....

16 மாத சிறைவாசத்திற்கு பிறகு வெளியில் வந்த அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்ற முதல் பொதுக்கூட்டம்

16 மாத சிறைவாசத்திற்கு பிறகு ஜாமீனில் வெளியில் வந்த நிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜி தனது தொகுதியான கரூரில்  நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய அவர், விஷன் 2030ல் கரூரின் ஜவுளி ஏற்றுமதியை 50 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்தும் வகையில்...

நடிகர் டெல்லி கணேஷ் (வயது 80) உடல்நலக்குறைவால் காலமானார்

நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் மறைந்த டெல்லி கணேஷ்... 40 ஆண்டுகளுக்கும் மேலாக தனக்கென தனி பாணியில் நடிப்புத் திறனை வெளிப்படுத்திய நடிகரைப் பற்றிய ஒரு செய்தித் தொகுப்பு... மைக்கேல் மதனகாமராஜன் படத்தில் கமல்ஹாசனுடன் டெல்லி கணேஷ்...

பருவமழை காலத்தில் வரும் வறட்டு இருமல், காய்ச்சல் வந்தால் சுய மருத்துவம் தவிர்த்து, உரிய மருத்துவர்களை அணுக வேண்டும்

பருவமழை தொடங்கியுள்ள நிலையில், காய்ச்சல், வறட்டு இருமல் பாதிப்புக்கு ஆளாகுபவர்கள், சுய மருத்துவம் மேற்கொள்ளாமல் உரிய மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ளுமாறு சென்னை ஓட்டேரி அரசு மருத்துவமனையின் நுரையீரல் துறை உதவி பேராசிரியர் ராதிகா அறிவுறுத்தியுள்ளார். சுமாராக ஒரு வார காலம்...

சிற்றார் அணை உபரி நீர் திறப்பு, கோதையாற்றில் வெள்ளப் பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை..

கன்னியாகுமரி மாவட்டம் சிற்றார் அணையில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீரால் கோதையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டும் நிலையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. கனமழை காரணமாக கடந்த வாரம் உபரிநீர் திறக்கப்பட்ட நிலையில் வெள்ளியன்று...

5 நாட்களாகியும் முளைக்காத நெல்மணி விதை ஆய்வு துணை இயக்குநர் தலைமையில் ஆய்வு..

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே வன்னியந்தாங்கல் கிராமத்தில் சுமார் 11 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட விஜயராஜா அக்ரோ ஹைடெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் கோ- 51 ரக நெல் விதைகள் 5 நாட்களாகியும் முளைக்காத நிலையில், வேலூர் மண்டல விதை ஆய்வு...

நள்ளிரவில் எதிர் வீட்டுக்குள் மேலடை இல்லாமல் நுழைந்த போலீஸ் ஏட்டு

தூத்துக்குடி கதிர்வேல் நகரில் நள்ளிரவு வேளையில் அரை நிர்வாணமாக சென்று எதிர்வீட்டு பெண்களிடம் பாலியல் சீண்டலில்  ஈடுபட்டதாக தலைமை காவலர் சுரேஷ் என்பவர் மீது சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரின் பேரில் இந்த சம்பவம் தொடர்பான...

பாரீஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை வெளியேற்ற டிரம்ப் திட்டம்..

காலநிலை மாற்றம் தொடர்பான பாரீஸ் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளில் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப்பின் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். பாரீஸ் காலநிலை ஒப்பந்தம், பொருளாதார ரீதியாக அமெரிக்காவுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக டிரம்ப் கருதுகிறார். இதனால் அந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய பிறகு...

திருவள்ளூர் நகராட்சியில் குரங்குகளின் அட்டகாசம்.. 30க்கும் மேற்பட்டவைகளை பிடித்து காட்டிற்குள் விட்ட வனத்துறையினர்..

திருவள்ளூர் நகராட்சியில் குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதால், நகராட்சி சார்பில் அளித்த புகார் அடிப்படையில் வனத்துறையினர் 30க்கும் மேற்பட்ட குரங்குகளை பிடித்து காட்டிற்குள் விட்டனர். திருவள்ளூர் நகராட்சி நீர் ஏற்றும் அறையின் அருகே குழந்தைகளை துன்புறுத்துவது, கையில் எடுத்துச் செல்லும் பொருட்களை பிடுங்குவது...

விருதுநகர் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு

அரசு திட்டப்பணிகளின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுநகர் மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டார். சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்றடைந்த முதலமைச்சர், அங்கிருந்து சாலை மார்க்கமாக விருதுநகர் சென்றார். அங்கு இருமருங்கிலும் திரண்டிருந்த தி.மு.க.வினர் கட்சிக்கொடிகளை...