​​
Polimer News
Polimer News Tamil.

சேலத்தில் கைதிகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய மருத்த அரசு மருத்துவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்

சேலத்தில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய மறுத்ததாகக் கூறப்படும் வாழப்பாடி அரசு மருத்துவமனை மருத்துவர் செந்தில்குமாருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மருத்துவப் பரிசோதனை செய்ய மறுத்ததுடன், போலீசாரின் செல்போனையும் செந்தில்குமார் பிடுங்க முயன்ற காட்சிகள் வெளியான நிலையில்,...

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் செவிலியரின் 5 சவரன் நகைத் திருட்டு

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையின் சித்த மருத்துவப் பிரிவுக்குள் நுழைந்து, செவிலியர் ஒருவரின் 5 சவரன் நகையைத் திருடிச் சென்ற நபரைப் போலீசார் தேடி வருகின்றனர். செவிலியர் வார்டுக்குள் சென்ற நேரம், அங்கு வந்த மர்ம நபர், சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு, அவசர அவசரமாக நகையைத்...

தூத்துக்குடியில் எதிர்வீட்டுப் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தலைமைக் காவலர் பணி நீக்கம்

தூத்துக்குடியில் நள்ளிரவில் எதிர்வீட்டுப் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில் வடபாகம் காவல் நிலைய தலைமைக் காவலர் சுரேஷ் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மதுபோதையில் அரை நிர்வாணமாக எதிர்வீட்டுக்குள் சுரேஷ் நுழையும் சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், அவர் மீது வழக்குப்பதிவும்...

விக்கிரவாண்டி அருகே காரின் முன்பக்க டயர் வெடித்து விபத்தில் 2 பேர் உயிரிழப்பு - 3 பேர் படுகாயம்

விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி நோக்கிச் சென்ற கார், விக்கிரவாண்டி அருகே ராதாபுரம் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, முன்பக்க டயர் வெடித்ததில், கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த மூன்று இரு சக்கர வாகனங்கள் மீது மோதியது. இதில், இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த...

மாமல்லபுரம் அருகே உள்ள பெருமாள் கோவிலில் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் நெற்றியில் திருநீறு பூசி, குங்குமம் வைத்து சர்வசாந்தி யாகம்

அமெரிக்காவைச் சேர்ந்த இந்து மத வழிபாட்டில் நம்பிக்கை கொண்ட சிலர், மாமல்லபுரத்தில் உள்ள தலசயனப் பெருமாள் கோவிலில் சர்வசாந்தி யாகம் நடத்தினர். நெற்றியில் திருநீறு பூசி, குங்குமம் வைத்து கழுத்தில் மாலை அணிந்து கைகூப்பிய உட்கார்ந்து யாகத்தில் கலந்துகொண்டனர். 2 மணி நேரம்...

தனியார் பள்ளி விடுதியில் 10ஆம் வகுப்பு மாணவி தற்கொலை... பள்ளி நிர்வாகத்தைக் கண்டித்து உறவினர்கள் சாலை மறியல்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருஈங்கோய்மலையிலுள்ள தனியார் பள்ளி ஒன்றில் படித்து வந்த 15 வயது மாணவி ஒருவர், விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் நிலையில், மாணவியின் உடல் வைக்கப்பட்டிருந்த முசிறி அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள்...

கன்னியாகுமரியில் தெருவில் அட்டகாசம் செய்த கஞ்சா போதை கும்பலை தட்டிக்கேட்ட இராணுவ வீரர் மீது கொடூரத் தாக்குதல்

கன்னியாகுமரி மாவட்டம் கேசவன்புதூரில், கஞ்சா போதையில் தெருவில் அட்டகாசத்தில் ஈடுபட்ட கும்பல்,  தட்டிக்கேட்ட முன்னாள் ராணுவ வீரர் சதீஷ் மோகன் என்பவரை கொடூரமாகத் தாக்கியுள்ளது. படுகாயமடைந்த சதீஷ்மோகன் ஐ.சி.யுவில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அவர்களில் பரத்...

UTS செயலியில் டிக்கெட் எடுப்பவரா? அபராதத்தைத் தவிர்க்க கவனம் தேவை அறிவுறுத்தும் ரயில்வே அதிகாரிகள்

சென்னை புறநகர் மின்சார ரயில்களில் பயணிப்பதற்காக ரயில்வேயின் யு.டி.எஸ் செயலி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, சில சமயங்களில் கட்டணம் எடுக்கப்பட்ட பின்பும், டிக்கெட் பதிவாவதில்லை என்று கூறப்படும் நிலையில், அந்தப் பயணிகள் அபராதம் செலுத்த நேரிடுவதாக புகார் எழுந்துள்ளது. முன்பதிவற்ற ரயில்...

ஒப்பற்ற நடிப்புத் திறன்.! இயல்பாக பழகும் குணம்.! என்றென்றும் டெல்லி கணேஷ்.!

சென்னை இராமாபுரத்தில் உள்ள இல்லத்தில், சனிக்கிழமை இரவு, குடும்பத்தினருடன் சேர்ந்து சாப்பிட்டுவிட்டு, ஜாலியாக பேசிக் கொண்டிருந்தவர், ஞாயிற்றுக்கிழமை காலை சூரிய உதயத்தை காண எழுந்திருக்கவில்லை. மாரடைப்பால் படுக்கையிலேயே, அவரது உயிர் பிரிந்திருந்தது. மருத்துவர்கள் அவரது இறப்பை உறுதி செய்த பின்னர், டெல்லி கணேஷ்...

ரஷ்யாவிற்கு அழுத்தம் கொடுப்பது அர்த்தமற்ற செயல் - அதிபர் புதின்

ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்காமல் மேற்கத்திய நாடுகள் பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் என்று அதிபர் விளாடிமிர் புதின் கேட்டுக்கொண்டார். விவாத மன்றம் ஒன்றில் பேசிய அவர், ஐரோப்பிய நாடுகளுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே பரஸ்பரம் நம்பிக்கை ஏற்பட வேண்டும் என்றார். உலகில் ஆதிக்கம் செலுத்த ஆர்வம் காட்டிய...