​​
Polimer News
Polimer News Tamil.

சுறா மீனைக் கட்டிப்பிடித்தபடி நடனம் ஆடிய நீச்சல் வீரர்

ரஷ்யாவில் புத்தாண்டு தினக் கொண்டாட்டத்தின் போது நீச்சல் வீரர் ஒருவர் சுறா மீனைக் கட்டிப்பிடித்தபடி நடனமாடும் வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள நெப்டியூன் வணிக வளாகத்தில் பிரமாண்டமான மீன் கண்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு புத்தாண்டு கொண்டாட்டத்தை...

குரு கோபிந்த் சிங்கின் 355ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்

சீக்கிய மதத்தை உருவாக்கி வளர்த்த பத்து குருக்களில் பத்தாவது குருவான போர்வீரர் குருகோபிந்த் சிங்கின் 355ஆவது பிறந்த நாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.  சீக்கியர்கள் இதற்காக நேற்று பிரம்மாண்டமான பேரணி ஒன்றை நடத்தினர். அமிர்தசரஸ் நகரின் புனிதத் தலமான பொற்கோவில் குருதுவாராவில் இருந்து...

குஜராத் உயிரியல் பூங்காவில் வாட்டும் குளிரிலிருந்து விலங்குகளைக் காப்பாற்ற புதிய யுக்தி

குஜராத் உயிரியல் பூங்காவில் குளிரிலிருந்து விலங்குகளைக் காக்க புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தலைநகர் அகமதாபாத்தில் கன்காரியா விலங்கியல் பூங்கா அமைந்துள்ளது. தற்போது அந்தப் பகுதியில் கடும் குளிர் நிலவி வருவதால் விலங்குகளும் ஏனைய உயிரினங்களும் வாடின. இதையடுத்து குளிரில் இருந்து விலங்குகளைக் காப்பாற்றும்...

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம்

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் சேக் முகமது பின் சாயீது அல் நஹ்யான், பாகிஸ்தானில் இன்று, சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இருநாட்டு நல்லுறவை மேம்படுத்த இந்த பயணம் மேற்கொள்ளப்படுவதாக சவுதி அரசு அறிவித்துள்ளது. இப்பயணத்தின் போது சேக் முகமது, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்...

ஈராக்கில் அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்ட விவகாரத்தில் டிரம்ப் புதிய முடிவு

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து சுமார் 4 ஆயிரம் வீரர்களை ஈராக்கில் களமிறக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பின் மீது நடத்தப்பட்ட வான்தாக்குதலை கண்டித்து ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டது....

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது போப்பின் கையைப் பிடித்து இழுத்த பெண்

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பெண்ணின் கையை தட்டி விட்டதற்காக போப் பிரான்சிஸ் மன்னிப்புக் கோரியுள்ளார். வாடிகன் நகரத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது போப் மக்களை நேரடியாகச் சந்தித்து கைகுலுக்கி வாழ்த்துத் தெரிவித்தார். அப்போது பெண் ஒருவர் ஆர்வமிகுதியால் போப்பின் கையைப் பிடித்து...

Centre vs State: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

குடியுரிமை தொடர்பான சட்டத்தை நிறைவேற்ற நாடாளுமன்றத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்றும் கேரள சட்டமன்றம் உட்பட எந்த ஒரு மாநில சட்டமன்றத்திற்கும் அதிகாரம் கிடையாது என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. குடியுரிமை சட்டத்தை அனைத்து மாநில அரசுகளும் அமல்படுத்த வேண்டும் என்றும்...

தேசிய குடிமக்கள் பதிவேடு: எந்த தனி நபரும் எந்த ஒரு ஆவணமும் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை

NPR எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எந்த ஒரு ஆவணமும் அவசியமில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வீடு வீடாக சென்று  மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு தனிநபர்கள் தாமாக முன்வந்து...

ஹாங்காக்கில் அரசு எதிர்ப்பாளர்கள் பிரமாண்ட பேரணி

ஹாங்காங்கில் நடைபெற்ற பிரமாண்ட பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஹாங்காங்கில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் 6 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகின்றன. 2020 புத்தாண்டு தொடக்க நாளான இன்றும் அரசு எதிர்ப்பாளர்களால் ஹாங்காங்கில் பிரமாண்ட பேரணி நடத்தப்பட்டது. அரசுக்கு எதிரான  போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து...

2020ல் தமிழ்த் திரையுலகம் எதிர்நோக்கும் 10 புதிய திரைப்படங்கள்

புத்தாண்டு பிறந்துள்ள நிலையில் 2020ஆம் ஆண்டில் வெளியாக உள்ள முக்கியமான பத்து தமிழ்த் திரைப்படங்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.  அரசியல் கட்சி தொடங்குவேன் என்று அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்துள்ள தர்பார் படம் பொங்கல் தினத்தன்று வெளியாகிறது. ஏற்கனவே இப்படத்தின்...