​​
Polimer News
Polimer News Tamil.

மீண்டும் முழு கொள்ளளவை எட்டியது பவானிசாகர் அணை

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை மீண்டும் முழு கொள்ளளவை எட்டியதால், பவானி ஆற்றில் விநாடிக்கு 3,100 கனஅடி வீதம் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. 105 அடி உயரமுள்ள அந்த அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த மாதம் 27ம் தேதி...

சென்னையில் மழையோடு துவங்கிய புத்தாண்டு.. மக்கள் மகிழ்ச்சி

புத்தாண்டு தினமான இன்று காலை சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. கிண்டி, ஆலந்தூர், மடிப்பாக்கம், மேடவாக்கம், துரைப்பாக்கம், அடையாறு, வேளச்சேரி, அம்பத்தூர், தியாகராயநகர், சாந்தோம், பட்டினப்பாக்கம், உள்ளிட்ட இடங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை நீடித்தது. சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம்,...

புத்தாண்டையொட்டி வடமாநிலங்களில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்

புத்தாண்டு தினத்தையொட்டி, வடமாநிலங்களில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. புத்தாண்டையொட்டி, உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில், கங்கா ஆரத்தி நிகழ்ச்சி நடைபெற்றது. புத்தாண்டு தினத்தையொட்டி, ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், வாரணாசியில், கங்கை நதிக்கரையில், கங்கா ஆரத்தி நிகழ்ச்சி...

விமானப் படையில் இணைந்தது "டோர்னியர்-228"

"டோர்னியர்-228" போர் விமானம், விமானப்படையின் 41-ஆவது பிரிவில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பங்கள் அடங்கிய டோர்னியர் ரக போர் விமானங்களை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் தயாரிப்போம் என்ற திட்டத்தின் கீழ் தயாரித்து வருகிறது. அந்நிறுவனத்திடமிருந்து 14 போர் விமானங்களை ஆயிரத்து 90 கோடியில்...

தமிழகம் முழுவதும் களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டங்கள்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவிலும், அதிகாலையிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டின.   சென்னை பெசன்ட் நகர் எலியாட்ஸ் கடற்கரையில் புத்தாண்டை கொண்டாட ஆயிரக்கணக்கான மக்கள் வந்திருந்தனர். அங்கு அவர்கள் கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் புத்தாண்டை சிறப்பாக வரவேற்றனர். புத்தாண்டில் பெண்கள் இரவு நேரத்தில்...

வருவாய் குறைவால், சிக்கன நடவடிக்கைகளில் மத்திய அரசு

வருவாய் குறைவு காரணமாக செலவைக் குறைக்கும் சிக்கன நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. நடப்பு 2019-20 நிதியாண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் சரக்கு-சேவை வரி வருவாய், 3 லட்சத்து 28 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. இது பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்பட்ட...

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் ஆங்கிலத்தில் பேச தீவிர நடவடிக்கை

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தமிழைப் போல ஆங்கிலத்திலும் சரளமாக பேச தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். புத்தாண்டையொட்டி சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் அவர் வழிபாடு நடத்தினார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு...

முப்படை தலைமைத் தளபதியாக இன்று பதவியேற்கிறார் பிபின் ராவத்..!

முப்படைகளின் தலைமைத் தளபதியாக பிபின் ராவத் இன்று பதவியேற்கிறார். ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளின் தலைமை தளபதியாக தற்போதைய ராணுவ தளபதி பிபின் ராவத்தை மத்திய அரசு நியமித்துள்ளது. இதற்கான முறைப்படியான அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. முப்படை தலைமை தளபதியாக...

புத்தாண்டை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறை

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தமிழகம் முழுவதும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, சென்னையில் நேற்றிரவு ஆயிரக்கணக்கான போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். காமராஜர் சாலையில் நேற்றிரவு 9 மணி முதல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. காவல்துறையினர்தடத்திய தீவிர வாகன...

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்து நான்கு நாட்களுக்கு மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.  தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நடப்பு ஆண்டில் ...