​​
Polimer News
Polimer News Tamil.

மகப்பேறு கால சிகிச்சை முறையை கர்ப்பிணி பெண்கள் அறிய புதிய செயலி விரைவில் அறிமுகம்

மகப்பேறு கால சிகிச்சை குறித்து கர்ப்பிணி பெண்கள் அறிந்து கொள்ள மெடர்னிட்டி டாஷ் போர்டு (maternity dash board) எனும் புதிய செயலியை சுகாதாரத் துறை விரைவில் வெளியிடவுள்ளது. குறை பிரசவமாகவும், எடை குறைவாகவும் பிறந்த 13 குழந்தைகள், எழும்பூரிலுள்ள தாய் சேய்...

தீப்பிழம்புகளைக் கக்கும் புதர்த்தீக்கு இடையே சிக்கிய வீரர்கள்

தீப்பிழம்புகளைக் கக்கும் புதர்த் தீயிக்கு இடையே ஆஸ்திரேலிய தீயணைப்பு வீரர்கள் சென்ற வாகனம் சிக்கிக்கொண்டதன் பரபரப்பு வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. சிட்னியில் இருந்து 160 கிலோ மீட்டருக்கு தெற்கே உள்ள நவ்ராவில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர்களின் வாகனம் புதர்த் தீயில்...

சிதம்பரம் நடராஜர் ஆலய ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றம் கோலாகலம்

பிரசித்திபெற்ற சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில், ஆருத்ரா தரிசன திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிவபெருமானின் பஞ்ச சபையில் பொற்சபையாகவும், பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலமாகவும் போற்றப்படும் இவ்வாலயத்தில், சிவபெருமான், திருவாதிரை நாளில் தனது ஆனந்த திருநடனக் காட்சியை, பதஞ்சலி முனிவருக்கு அருளியதாக ஐதீகம்...

ஜனவரி 5 வரை வடகிழக்கு பருவமழை தொடர வாய்ப்பு

ஜனவரி 5ஆம் தேதி வரை வடகிழக்கு பருவமழை தொடர்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில், வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த...

புத்தாண்டை முன்னிட்டு குடியரசு தலைவர், பிரதமருக்கு முதலமைச்சர் வாழ்த்து

 குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர், ஆளுநர் ஆகியோருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பூங்கொத்துகளுடன் அவர் வாழ்த்துக் கடிதங்களை அவர்களுக்கு அனுப்பியுள்ளார். குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த்துக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் தொடர்ந்து நாட்டுக்கு சிறப்பான...

காஷ்மீரில் செல்போன் குறுந்தகவல் சேவை மீண்டும் செயல்படத் தொடங்கியது

காஷ்மீரில் 5 மாதங்களுக்கு பிறகு செல்போன் குறுந்தகவல் சேவையும், அரசு மருத்துவமனைகளில் பிராட்பேண்ட் இணையதள சேவையும் இன்று முதல் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து மற்றும் அந்த மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம்...

பாக்தாத் தூதரக தாக்குதல்-ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

பாக்தாத்தில் அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்ட விவகாரத்தில், ஈரானுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிபர் டிரம்ப், அந்நாட்டின் மீது போர் தொடுக்கும் திட்டம் இல்லை என்று கூறியுள்ளார். ஈரான் ஆதரவு கிளர்ச்சிப் படையான கத்தேப் ஹிஸ்புல்லாவின் 25 பேரை அமெரிக்க விமானப்படை குண்டு வீசி கொன்றதற்கு...

முப்படைகளின் முதல் தலைமை தளபதியாக பிபின் ராவத் பதவியேற்றார்

இந்திய முப்படைகளின் முதல் தலைமை தளபதியாக பிபின் ராவத் இன்று பதவியேற்றுக் கொண்டார். டெல்லியில் உள்ள தேசிய போர் வீரர்கள் நினைவிடத்துக்கு பிபின் ராவத் இன்று காலை சென்று மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கு வீரர்கள் அளித்த அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார்.  தொடர்ந்து...

உலகிலேயே புத்தாண்டு தினத்தில் இந்தியாவில்தான் அதிக குழந்தைகள் பிறந்துள்ளது - UNICEF

புத்தாண்டு தினமான இன்று, உலகிலேயே இந்தியாவில்தான் அதிக குழந்தைகள் பிறக்கவுள்ளதாக யுனிசெப் அமைப்பு மதிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள யுனிசெப் அமைப்பு, நேற்று நள்ளிரவு முதல், ஜனவரி 1ஆம் தேதி இரவு வரையிலான காலக்கட்டத்தில், உலகம் முழுவதும்  சுமார் 3 லட்சத்து...

தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மழை

புதுச்சேரியில் காலை முதலே மழை விட்டு விட்டு பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் முத்தியால்பேட்டை, முதலியார்பேட்டை, காமராஜ் நகர் ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுற்றுவட்டாரத்தில் மிதமான மழை...