​​
Polimer News
Polimer News Tamil.

வரி செலுத்த சமரசத் திட்டம் நீட்டிப்பு..!

வருமான வரி குற்றங்கள் மற்றும் வரி செலுத்தாதவர்களுக்கான சமரச திட்டம் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நேரடி வரிகள் வாரியம் விடுத்துள்ள அறிக்கையில், வருமான வரி குற்றங்கள், வரி ஏய்ப்பு ஆகியவற்றில் ஈடுபட்டவர்களுக்கு வழக்குகளில் இருந்து நிவாரணம் அளிக்கும்...

73 மாநிலங்களவை எம்பிக்களுக்கு நடப்பாண்டில் தேர்தல்?

தமிழகத்தில் 6 எம்பிக்கள் உள்பட நாடு முழுவதும் 73 மாநிலங்களவை எம்பிக்களுக்கான தேர்தல் நடப்பாண்டு நடக்க உள்ளது. 250 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவையில் ஆளும் பாஜகவுக்கு 83 உறுப்பினர்களும், காங்கிரஸ் கட்சிக்கு 46 உறுப்பினர்களும் உள்ளனர். இவர்களில், பாஜகவைச் சேர்ந்த 18 பேர்,...

ஆன்மீக எழுத்தாளர் பரணீதரன் காலமானார்

முதுபெரும் ஆன்மீக எழுத்தாளர் பரணீதரன் காலமானார். அவருக்கு வயது 95. மெரீனா என்ற பெயரில் நாடகங்களை எழுதிய பரணீதரன் ஏராளமான ஆன்மீக நூல்களை எழுதியுள்ளார். வார இதழ்களில் அவர் எழுதிய திருத்தலப் பெருமை, ஆலய தரிசனம், பத்ரி கேதார் யாத்திரை போன்ற பயண- பக்தி...

விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கை ஏற்பு

கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கிருஷ்ணகிரி கேஆர்பி அணையில் உள்ள 7 பழுதான மதகுகளை மாற்றி அமைக்கும் பணி தொடங்கியது. 60ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த அணையில் கடந்த 2017-ல்  பிரதான முதல் மதகு உடைந்தது. மற்ற...

சாலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களை தாக்க வந்த காட்டு யானை

நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் சாலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களை தாக்க வந்த காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. மசினகுடி பகுதியில் உள்ள சாலையை ஜேசிபி இயந்திரம் கொண்டு சீரமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த காட்டு...

நாடு முழுவதும் 100 வழித்தடங்களில் தனியார் ரயில்களுக்கு அனுமதி

சென்னை - ஹவுரா, சென்னை - ஓக்லா உள்ளிட்ட 100 வழித்தடங்களில் தனியார் மூலம் ரயில்களை இயக்க நிதி ஆயோக் மற்றும் ரயில்வே துறை சார்பில் 22 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. தனியார் பங்களிப்புடன் பயணிகள்...

காசிம் சுலைமானியை தமது உத்தரவின் பேரில் அமெரிக்க வீரர்கள் கொன்றனர் -அதிபர் டிரம்ப்

உலகின் முதன்மையான தீவிரவாதியான காசிம் சுலைமானியை தமது உத்தரவின் பேரில் அமெரிக்க படையினர் மிகச்சரியாக திட்டமிட்டு தாக்கி அழித்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க உயர் அதிகாரிகளைக் கொல்வதற்கு அவர் திட்டமிட்டதாகவும் கையும் களவுமாக சிக்கிய அவரை அமெரிக்க வீரர்கள்...

2019-ம் ஆண்டில் இந்தியாவிற்கு அதிகம் வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்

வெளிநாடுகளில் இருந்துவரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 3 விழுக்காட்டும் அதிகம் என மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலக பொருளாதார மன்றத்தின் சுற்றுலா மற்றும் சுற்றுலா போட்டித்திறன் குறியீட்டில் (டி.டி.சி.ஐ) இந்தியாவின் தரவரிசை 2013 இல் 65 ஆக இருந்து. 2019ல் 34வது...

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் 31ந் தேதி தொடக்கம்?

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 31ம் தேதி தொடங்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பட்ஜெட் கூட்டத்தொடரை எப்போது நடத்தலாம் என்பதை, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையிலான நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு பரிந்துரைக்கும். அதன் பின்னர் மத்திய அரசு...

சைரஸ் மிஸ்திரி நியமனத்தை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ரத்தன் டாடா மனு

டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக சைரஸ் மிஸ்திரியை நியமிக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ரத்தன் டாடா மனுத்தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், டாடா சன்ஸ் நிர்வாக தலைவராக சைரஸ் மிஸ்திரி நியமிக்கப்பட்டது முற்றிலும் தொழில்...