​​
Polimer News
Polimer News Tamil.

வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தை குறைத்தது HDFC

பாரத ஸ்டேட் வங்கியை தொடர்ந்து, ஹெச்.டி.எப்.சி. வங்கியும் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளது.  குறுகிய கால அடிப்படையில் வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை தொடர்ந்து குறைத்த  ரிசர்வ் வங்கி, அதன் பலனை  வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டுமென வங்கிகளுக்கு உத்தரவிட்டது. இதையேற்று...

தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், தமிழகம் மற்றும் கர்நாடகத்தை  ஒட்டிய பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவுவதாக...

அதிமுக மீது வேண்டுமென்றே மதச்சாயம் பூசப்படுவதாக அமைச்சர் குற்றச்சாட்டு

அதிமுக மீது வேண்டுமென்றே மதச்சாயம் பூசப்பட்டு வருவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றஞ்சாட்டியுள்ளார். மதுரை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுகவினருடன் சென்று மதுரை கேகே நகரில் உள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர்...

வாக்கு முத்திரை பதியப்பட்ட வாக்குச்சீட்டுகள் சாலையோரம் கிடந்ததால் பரபரப்பு

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே வாக்குமுத்திரை பதியப்பட்ட வாக்குச்சீட்டுகள், சாலையோரம் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் குன்னம் அருகே குறிப்பிட்ட சின்னத்தில் வாக்கு முத்திரை பதியப்பட்ட இளஞ்சிவப்பு நிற வாக்குச்சீட்டுகள்...

ஒருவர் காலில் ஒருவர் விழுந்த போராட்டக்காரர்களும் போலீஸ் அதிகாரியும்

ஆந்திர மாநிலம் அமராவதியில் காவல்துறை அதிகாரியும் போராட்டக்காரர்களும் பரஸ்பரம் ஒருவர் காலில் ஒருவர் விழுந்தனர். முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் 3 தலைநகர் திட்டத்தால் அமராவதியின் முக்கியத்துவம் குறைந்துவிடும் என்று கூறி கடந்த 3 வாரங்களாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அமராவதியை அடுத்த...

பெருவில் எருது ஓட்ட நிகழ்ச்சியில் எருது களேபரம்

பெருநாட்டில் 2020ம் ஆண்டு புத்தாண்டையொட்டி நடைபெற்ற பாரம்பரிய எருது ஓட்ட நிகழ்ச்சியில் எருது ஒன்று, பார்வையாளர்களை முட்டியதில் ஏராளமானோர் காயமடைந்தனர். ஹூவான்வெலிசியா பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை காண நூற்றுக்கானோர் திரண்டிருந்தனர். அப்போது எருது ஒன்று திடீரென பார்வையாளர்கள் பகுதிக்குள் புகுந்து, அங்கிருந்தோரை சரமாரியாக...

இந்திய சுற்றுப்பயணத்தை ஒத்திவைத்தார் ஆஸ்திரேலிய பிரதமர்

ஆஸ்திரேலியாவில் புதர்தீயை கட்டுப்படுத்தும் பணியை மேற்பார்வையிடும் வகையில் இந்தியாவில் இம்மாதம் மேற்கொள்ள இருந்த சுற்றுப்பயணத்தை அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் ஒத்திவைத்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும், ஜப்பானிலும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், இந்த மாதம் மத்தியில் சுற்றுப்பயணம் செய்ய முடிவு செய்திருந்தார்....

ராஜஸ்தானில் மேலும் ஒரு மருத்துவமனையிலும் 10 பச்சிளம் குழந்தைகள் இறப்பு

ராஜஸ்தான் மாநிலத்தில் மேலும் ஒரு மருத்துவமனையிலும், ஒரே மாதத்தில் 10 குழந்தைகள் இறந்திருப்பது தெரிய வந்துள்ளது. ஏற்கனவே அம்மாநிலத்தின் கோட்டா பகுதியிலுள்ள அரசு மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியானதாக வெளியான தகவல் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பண்டி பகுதியிலுள்ள...

வடமாநிலத்தவரின் கடைகளுக்கு இரவோடு இரவாக பூட்டு..

தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் வடமாநிலத்தவரின் கடைகளுக்கு இரவோடு இரவாக மேல் பூட்டுப் போடப்பட்டுள்ளதுடன் தமிழகத்தை விட்டு வெளியேற வலியுறுத்தும் சுவரோட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. தஞ்சையில் கிரானைட், இனிப்புகள், இரும்பு பொருட்கள் உள்ளிட்ட கடைகளை நடத்தி வரும் வடமாநிலத்தவர்கள் நேற்று இரவு கடைகளை பூட்டிச்...

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைக் காண சிறப்பு ஏற்பாடு

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை காண தமிழக சுற்றுலாத்துறை சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வரும் 17ம் தேதி நடைபெறுகிறது. இதனை காண 16ம் தேதி இரவு சென்னையிலிருந்து புறப்படும், சுற்றுலாத்துறைக்கு சொந்தமான சொகுசுப் பேருந்து மறுநாள் காலை...