​​
Polimer News
Polimer News Tamil.

தீ விபத்தில் உயிரிழந்த வீரரின் குடும்பத்திற்கு ஆம் ஆத்மி ரூ.1 கோடி நிதியுதவி

டெல்லியில் ஏற்பட்ட தீவிபத்தின் போது தீயை அணைக்கும் பணியில் உயிரிழந்த தீயணைப்பு வீரர் அமித் பாலியானின் குடும்பத்திற்கு ஆம் ஆத்மி அரசு 1 கோடி ரூபாய் உதவித்தொகை வழங்கியுள்ளது. டெல்லியின் பீராகரி பகுதியில் உள்ள தொழில்பேட்டையின் கிடங்கு ஒன்றில் பயங்கர தீ விபத்து...

நீரவ் மோடியை இந்தியா அழைத்து வர சட்ட நடவடிக்கை - வெளியுறவு அமைச்சகம்

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி தமது உறவினர் மெகுல் சோக்சியுடன் இங்கிலாந்துக்கு தப்பிச் சென்ற வைர வியாபாரி நீரவ் மோடியை இந்தியா அழைத்து வர அனைத்து சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மத்திய வெளியுறவு அமைச்சகம்...

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக 3 நபர் கொண்ட தனிக்குழுவை நியமித்தது மத்திய அரசு

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக திட்டமிட கூடுதல் செயலர் ஜெய்னேஷ் குமார் தலைமையிலான 3 அதிகாரிகள் கொண்ட புதிய குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது. அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவை இக்குழு நிறைவேற்றும். அயோத்தி வழக்கு தொடர்பான...

பிரதமர் மோடி மீது லோக்பாலில் எவ்வித புகார்களும் இல்லை என தகவல்

பிரதமர் மோடி மீது எவ்வித ஊழல் புகார்களும் லோக்பால் அமைப்புக்கு இதுவரை செல்லவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் உயர் பதவிகளை வகிப்போர் மீது கூறப்படும் ஊழல் புகார்களை விசாரிக்க, லோக்பால் எனும் அமைப்பு துவங்கப்பட்டு, கடந்த மார்ச் மாதம் முதல்...

பல மாவட்டங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிப்பு

தமிழ்நாட்டில், பல மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குகள் முழுவதுமாக எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மதுரையில் வாக்கு எண்ணிக்கை 100 சதவிகிதம் நிறைவடைந்து முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த வகையில், 23 மாவட்ட கவுன்சிலர் பதவி இடங்களில் திமுக 12இல் வெற்றிபெற்றுள்ளது. அதிமுக 9...

பிரதமரிடமிருந்து தமிழக அரசு சார்பில் விருது பெற்றார் அமைச்சர் ஜெயக்குமார்

தமிழ்நாடு, எண்ணெய் வித்துகள் உற்பத்தியில்  தேசிய அளவில் சாதனை படைத்ததற்காக கர்நாடக மாநிலம் தும்கூரில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடியிடமிருந்து கிருஷி கர்மான் விருதை தமிழக முதலமைச்சர் மற்றும் வேளாண்துறை அமைச்சர் சார்பில் அமைச்சர் டி. ஜெயக்குமார் பெற்றுக் கொண்டார். அப்போது, ...

2ஆவது முறையாக மாநில தேர்தல் ஆணையரை சந்தித்து புகார் அளித்த மு.க.ஸ்டாலின்

வாக்கு எண்ணிக்கை தொடர்பாக, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் மீண்டும் புகார் அளித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முடிவுகளை உடனடியாக அறிவிக்க வலியுறுத்தியிருக்கிறார்.  உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை நியாயமான முறையில் நடத்தி முடிவுகளை உடனே அறிவிக்க வேண்டும் என்று மாநில தேர்தல்...

வாக்கு எண்ணிக்கை முறையாக நடைபெறுவதை உறுதிப்படுத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு

வாக்கு எண்ணிக்கை முறையாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்என்று உயர் நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், முடிவுகளை உடனடியாக அறிவிக்க கோரி திமுக சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்குத் தொடர்ந்தார். இந்த...

உணவு, குடிநீர் வழங்கவில்லை எனக்கூறி, பல இடங்களில் தேர்தல் பணியாளர்கள் போராட்டம்

ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபட்ட ஊழியர்களில் சிலருக்கு முறையாக உணவு வழங்கப்படவில்லை என புகார் எழுந்தது. இதனால், ஒருசில இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றதால், வாக்கு எண்ணிக்கை தாமதமானது.  கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் தேர்தல் பணியாளர்களுக்கு உணவு மற்றும்...

பிரதமர் நரேந்திர மோடியின் அன்பும் அரவணைப்பும் ஆறுதலும் மகத்தானது - இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி

சந்திரயான் 2 திட்டம் தோல்வியடைந்த போது, பிரதமர் மோடி இஸ்ரோ தலைவர் கே.சிவனுக்கு முதுகில் தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறியும் ஆரத் தழுவியும் அன்பை செலுத்திய காட்சிகள் இணையத்திலும் ஊடகங்களிலும் வைரலாகப் பரவின. இந்த அணைப்பும் ஆறுதலும் பிரதமரிடமிருந்து பல உயர்ந்த பண்புகளை...