​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாஜக ஆளும் 5 மாநிலங்களில் அக்னிவீரர்களுக்கு மாநில அரசின் வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு அளிக்க முடிவு

Published : Jul 27, 2024 11:00 AM

பாஜக ஆளும் 5 மாநிலங்களில் அக்னிவீரர்களுக்கு மாநில அரசின் வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு அளிக்க முடிவு

Jul 27, 2024 11:00 AM

கார்கில் யுத்தம் வெற்றியின் வெள்ளிவிழாவை முன்னிட்டு பாஜக ஆளும் 5 மாநிலங்களில் அக்னிவீரர்களுக்கு மாநில அரசின் வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், ஒடிசா, சட்டிஸ்கர் ஆகிய 5 மாநிலங்களில் காவல்துறை காலிப் பணியிடங்களை நிரப்புவதில் அக்னிவீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று சிறைத்துறை, வனத்துறை போன்ற பல்வேறு துறைகளில் அக்னிவீரர்களுக்கு வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. எதிர்க்கட்சியினர் அக்னிவீரர் திட்டத்திற்கு எதிராக பரப்பி வரும் பொய்ப்பிரச்சாரம் இதன் மூலம் முறியடிக்கப்பட்டிருப்பதாக பாஜக தெரிவித்துள்ளது.