​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இந்திய பாதுகாப்புப் படை வீரர்களுக்கு வாட்ஸ் ஆப் பாதுகாப்பு வழிமுறை

பாகிஸ்தான் உளவாளிகள் ஹேக் செய்யக் கூடும் என்பதால், இந்திய பாதுகாப்புப் படையில் வாட்ஸ் ஆப் பயன்படுத்தும் வீரர்களுக்கு சில பாதுகாப்பு வழிமுறைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. 2015, 2018ல் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், பஞ்சாப், உத்தரபிரதேசத்தில் முப்படைகளைச் சேர்ந்த 98அதிகாரிகளின் கணினிகளை பாகிஸ்தான் உளவாளிகள் ஹேக் செய்தனர். இது...

ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் காயம் அடைந்த வீரர்களில் இருவர் உயிரிழந்தனர். அரிஹால் (( Arihal)) என்ற கிராமத்தில்  ராணுவத்தின் 44 ராஷ்டிரீய ரைஃபிள் பிரிவைச் சேர்ந்த வீரர்கள் சென்றுகொண்டிருந்த வாகனத்தின் மீது நேற்று...

பயங்கரவாதிகள் தாக்குதலில் ராணுவ மேஜர் உயிரிழப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடனான மோதலில் ராணுவ மேஜர் உயிரிழந்தார். அசபல் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, ராணுவ வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து, ராணுவ வீரர்களும்...

தீய சக்திகளை விரட்ட ஹெலிகாப்டரில் இருந்து புனித நீர் தெளிப்பு

வானில் இருந்து புனித நீர் தெளித்து தீய சக்திகளை விரட்டுவதாக கூறும் பாதிரியாரின் முயற்சிக்கு கொலம்பிய ராணுவம் ஹெலிகாப்டர் வழங்கி உதவவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொலம்பியாவின் துரதிர்ஷ்டமாக பியூனாவென்ட்சுரா ((Buenaventura)) எனும் மாநகராட்சி கருதப்படுகிறது. இங்கு மட்டும் கடந்த ஜனவரி மாதம் முதல்...

கொட்டிக்கிடக்கும் உறைபனிக்கு இடையே யோகா செய்யும் பாதுகாப்புப்படை வீரர்கள்

லடாக் பனிப்பிரதேசத்தில், கடுங்குளிருக்கு மத்தியில், இந்திய - திபெத் எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் யோகா செய்யும் காட்சி வெளியாகியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், ஜூன் மாதம் 21ஆம் ஏதி, பன்னாட்டு யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, இமயமலைத் தொடரின், பனிமலை சிகரத்தில்,...

கடலில் விழுந்து உயிருக்குப் போராடிய ராணுவ அதிகாரி

கோவாவின் தெற்கு பகுதியில், கடலில் விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இளம் ராணுவ அதிகாரி ஒருவரை கடலோர காவல் படையினர் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்டனர். திரைப்படக் காட்சியை மிஞ்சும் இந்த சாகசம் வீடியோவில் பதிவாகியுள்ளது. கடல் கொந்தளிப்பு,மழை என இயற்கை இடர்களுக்கு...

தீவிரவாதியை சுட்டுக் கொன்ற பாதுகாப்புப் படை வீரர்கள்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோப்பூரில் தீவிரவாதி ஒருவனை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். பாரமுல்லா மாவட்டம் சோப்பூரில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து அங்கு சென்ற வீரர்கள், தீவிரவாதிகள் தப்பி விடக் கூடாது...

பூஞ்ச் - மெந்தார் சாலையில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டு

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்சில், சாலையில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டை, ராணுவத்தினர் பாதுகாப்பாக வெடிக்கச் செய்தனர். பூஞ்ச் மாவட்டம், கிருஷ்ணா ஃகாட்டி என்ற இடத்தில் மெந்தார் செல்லும் சாலையில் வெடிகுண்டு புதைத்து வைக்கப்பட்டு இருந்ததை ராணுவத்தினர் கண்டுபிடித்தனர். இதை அடுத்து அந்தச் சாலையில் போக்குவரத்து...

அண்ணா விளையாட்டு மைதானத்தை சுத்தம் செய்த ராணுவ வீரர்கள்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கின் மைதானத்தை ராணுவ வீரர்கள் ஒருங்கிணைந்து சுத்தம் செய்தனர். குமரி மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர்கள், கன்னியாகுமரி ஜாவான்ஸ் என்ற அமைப்பை தொடங்கி, விடுமுறையில் சொந்த ஊருக்கு வரும் போதெல்லாம் பொதுப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சாலை...

எந்த சூழலிலும் பணியாற்றத் தயார் - ராணுவ வீரர்கள்

நாட்டில் எல்லையோரத்தில் அனல் காற்று வீசும் நிலையில், எந்த சூழலிலும் பணியாற்றத் தயார் என எல்லை பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.  எல்லையோர மாநிலங்களில்  கடந்த சில தினங்களாக அனல் காற்று வீசி வருகிறது. ஆனால் எந்த காலநிலையையும் பொருட்படுத்தாமல் எல்லை காக்கும் பணியில்...