​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கடின உழைப்பும் உறுதியும் இருந்தால் வெற்றி வரும்.. கூட்டணி கட்சிகளுடனும் இணைந்து செயல்படுவோம்: கார்கே

Published : Jun 08, 2024 10:02 PM

கடின உழைப்பும் உறுதியும் இருந்தால் வெற்றி வரும்.. கூட்டணி கட்சிகளுடனும் இணைந்து செயல்படுவோம்: கார்கே

Jun 08, 2024 10:02 PM

நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் இண்டியா கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளுடனும் இணைந்து ஒற்றுமையாக செயல்பட உள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார்.

அக்கட்சியின் நீட்டிக்கப்பட்ட செயற்குழுக் கூட்டத்தில் பேசிய கார்கே, கடின உழைப்பும் உறுதியும் இருந்தால் மிகப்பெரிய எதிரிகளையும் வீழ்த்த முடியும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும் என்றார்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது எழுப்பிய பொது மக்களின் கவலைக்குரிய பிரச்சினைகளை நாடாளுமன்றத்துக்குள்ளும் வெளியேயும் தொடர்ந்து எழுப்புவோம் என்றும் அவர் தெரிவித்தார்.