​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் டெல்லி வருகை

அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீம் யுவேஸ் லி டிரியன் பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அரசு முறைப்பயணமாக டெல்லி வந்துள்ள அவர், அங்கு முதலில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்தார். இந்தியா-பிரான்ஸ் இடையிலான...

டெல்லியில் மத்திய அமைச்சர் தலைமையில் பா.ஜ.கவினர் ஆர்பாட்டம்

ரஃபேல் விவகாரத்தில் நாட்டு மக்களிடம் பொய் கூறிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி மத்திய அமைச்சர் விஜய் கோயல் தலைமையில் டெல்லியில் பா.ஜ.கவினர் ஆர்பாட்டம் நடத்தினர். ரஃபேல் விவகாரத்தில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என்பதால் விசாரணை தேவையற்றது என்று...

டெல்லி சாந்தினி சவுக்கில் தனியார் லாக்கரில் இருந்து ரூ. 3.25 கோடி பறிமுதல்

டெல்லி சாந்தினி சவுக்கில் தனியார் லாக்கரில் இருந்து வருமான வரித்துறையினர் 3 கோடியே 25 லட்சம் ரூபாய் ஹவாலா பணத்தை கைப்பற்றியுள்ளனர். டெல்லியில் ஹவாலா பணப் பரிவர்த்தனைகளைக் கட்டுப்படுத்த வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். ஹவாலா தரகர்கள் தனியாருக்கு...

மெகுல் சோக்சிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறபித்தது இண்டர்போல்

வங்கி மோசடி வழக்கில் தலைமறைவான மெகுல் சோக்சிக்கு எதிராக இண்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடியும் அவரது உறவினர் மெகுல் சோக்சியும் பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 12 ஆயிரம் கோடி...

ரபேல் விவகாரம் குறித்து சி.பி.ஐ விசாரணை கோரிய வழக்கில் வெள்ளிக்கிழமை தீர்ப்பு- உச்சநீதிமன்றம்

ரபேல் விவகாரத்தில் விசாரணை கோரிய வழக்கில் வெள்ளிக்கிழமை அன்று தீர்ப்பு அளிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் பெருமளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்தக்கோரி வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், முன்னாள் மத்திய...

பிரதமர் மோடி தலைமையில் பாஜக எம்.பி.க்கள் கூட்டம், 5 மாநில தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்கப்படவில்லை என தகவல்

பிரதமர் மோடி தலைமையில், டெல்லியில் பாஜக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. 5 மாநில தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், நாடாளுமன்ற நூலக கட்டிடத்தில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக எம்.பி.க்கள் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. பாஜக தலைவர் அமித்ஷா,...

பாலியல் கொடுமைக்கு உள்ளானவரின் பெயரை ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கைகள் வெளியிடக் கூடாது -உச்சநீதிமன்றம்

பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாவோரின் பெயர்கள், அவர்களது அடையாளங்களை, எந்த சூழலிலும், ஊடகங்கள், பத்திரிக்கைகள் வெளியிடக் கூடாது என உச்சநீதிமன்றம் கண்டிப்புடன் அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பான வழக்கு, உச்சநீதிமன்ற நீதிபதி மதன் B லோகூர் அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, எக்காரணத்தை கொண்டும்,...

பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்று வருகிறது.  நவம்பர் மாதம் நடைபெற வேண்டிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக டிசம்பரில் நடக்கிறது. நாளை தொடங்கி...

எதிர்க்கட்சித் தலைவர்கள் டெல்லியில் இன்று சந்திப்பு... மக்களவைத் தேர்தலுக்கான வியூகம் குறித்து ஆலோசனை

பா.ஜ.க.வுக்கு எதிராக அணிதிரண்டுள்ள எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் டெல்லியில்  இன்று நடைபெறுகிறது. மக்களவைத் தேர்தலுக்கான வியூகம் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக மக்களவைத் தேர்தலில் மகா பந்தனம் என்ற பெயரில் மெகா கூட்டணி...

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி டெல்லியில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் பேரணி

அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்ட வலியுறுத்தி, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் டெல்லியில் நடத்திய பேரணியில் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். வரும் குளிர்கால நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இதுகுறித்து சட்டமசோதா நிறைவேற்ற வலியுறுத்தி, டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் பிரம்மாண்டமான கூட்டம் நடைபெற்றது....