அடுத்தடுத்த தேர்தல்களைப் பற்றி தாம் சிந்திப்பதில்லை என்றும், 2047-ல் நாடு தனது நூறாவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் சமயத்தில், நாடு எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றி மட்டுமே யோசிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஆங்கில செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், இன்று இளைஞர்களாக இருப்பவர்கள், நூறாவது சுதந்திர ஆண்டில் முதியோர்களாக மாறும்போது அவர்களைப் பற்றி யோசிப்பது அரசாங்கத்தின் கடைமை என்றும் அவர் தெரிவித்தார்.
பொது சிவில் சட்டம் என்பது மோடியின் திட்டமோ, பாஜகவின் திட்டமோ அல்ல என்றும், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திலேயே அது இருப்பதாகவும், அதை முந்தைய அரசுகள் வாக்கு வங்கி அரசியலுக்காகச் செயல்படுத்தவில்லை என்றும் அவர் குற்றம் சுமத்தினார்.