பிரதமர் மோடி நாளை நாடாளுமன்றத்தில் முக்கிய உரை நிகழ்த்த உள்ளார்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு பிரதமர் அளிக்கும் பதிலுரையைக் கேட்க இறுதிவரை அவையில் இருக்குமாறு பாஜக எம்பிக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட உள்ளதால் தமது அரசின் சாதனைகளைப் பிரதமர் மோடி விளக்க உள்ளார். மேலும் அடுத்த புதிய திட்டங்களையும் அவர் அறிவிக்க உள்ளார்.
தவிர தமது கட்சியின் எம்பிக்களுக்கான செயல்திட்டத்தை பிரதமர் வகுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.