குஜராத் காந்திநகர் வர்த்தக உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி டெல்லி திரும்ப விமான நிலையத்துக்குச் செல்லும் போது அகமதாபாத் மலர்க் கண்காட்சியைப் பார்வையிட்டார்.
பிரதமரின் எதிர்பாராத வருகையால் மலர்க்கண்காட்சி நடத்திய மாநகராட்சி அதிகாரிகள் வியப்புடன் வரவேற்றனர்.
பல வண்ண அழகான மலர்களின் வாசத்தின் நடுவே, மின்விளக்கு அலங்காரங்களைப் பார்வையிட்ட பிரதமர் மோடி 15 நிமிடங்களுக்குப் பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச்சென்றார்.