தேர்தலுக்கு காலம் உள்ளதால் கூட்டணி குறித்து உரிய நேரத்தில் முடிவெடுப்போம் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பேசிய அவர், துணை முதலமைச்சர் பதவி ஒரு டம்மி போஸ்ட் என்றும் கடந்த அதிமுக ஆட்சியில் துணை முதலமைச்சராக இருந்த போது தமக்கு எந்த ஒரு அதிகாரமும் இல்லை என்றும் கூறினார். பாஜக தேசிய தலைமையுடன் நட்பின் அடிப்படையில் தான் பேசி வருகிறோம் என்றும் கூட்டணி குறித்து பேசவில்லை என்றும் கூறினார்.