தங்களது தொகுதி தொடர்பான கோரிக்கை மனுக்களை வழங்கவே மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை, அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் நேற்று சந்தித்ததாகவும், அதில் அரசியல் காரணங்கள் ஏதும் இல்லை என்றும் பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க கோவை வந்த நிர்மலா சீதாராமன் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
அவரை விமான நிலையத்தில் வழியனுப்பிய பின் பேட்டியளித்த வானதி சீனிவாசன், பா.ஜ.க. மாநில தலைவர் இல்லாமலேயே அமைப்புச் செயலாளர் கூட்டம் நடத்தலாம் என அண்ணாமலை இன்றி நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டம் தொடர்பாக கூறியுள்ளார்.