​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கோவை மாவட்டம் செட்டிபாளையத்தில் உற்சாகமாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி

கோவையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 500க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று ஆக்ரோஷத்துடன் சீறிபாய்ந்த காளைகளை அடக்கினர். மதுரையைச் சேர்ந்த இளைஞர் 13 காளைகளை அடக்கி வீட்டுமனை, கார் ஆகியவற்றை பரிசாக பெற்று  பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தார்.  கோவை செட்டிபாளையம் பகுதியில் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு...

கோயம்புத்தூரை விபத்தில்லா நகரமாக மாற்ற நடவடிக்கை, அதிநவீன கண்காணிப்பு கேமிராக்கள் வசதியை தொடங்கி வைத்தார் எஸ்.பி.வேலுமணி

கோயம்புத்தூர் மாநகரை, விபத்தில்லா நகரமாக மாற்றும் நோக்கில் போக்குவரத்து காவலர்களுக்கான அதிநவீன கேமராக்கள் வசதியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்திருக்கிறார். உயிர் என்ற அமைப்பு சார்பில் இந்த அதிநவீன கேமராக்கள் ஜெயம் பேக்கரி, எல்ஐசி சந்திப்பு, லட்சுமி மில் உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன....

ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆய்வு

கோவையில் ஞாயிறன்று நடைபெறும் ஜல்லிகட்டு போட்டிக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார். கோவை செட்டிபாளையத்தில் நடைபெறும் ஜல்லிகட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் பார்வையிட்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது இவ்வாறு கூறினார்....

தனியார் கல்லூரியில் நடைபெற்ற பளுதூக்கும் போட்டி

கோயமுத்தூர் தனியார் கல்லூரியில் தென்னிந்திய அளவிலான பளு தூக்கும் போட்டி நடைபெற்றது. இதில் ஆண்களுடன் பெண்களுமாக 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 5 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. வரும் 17ம் தேதி பரிசுகள் வழங்கப்படும். முன்னதாக நடைபெற்ற துவக்க விழாவின் ஒரு...

மதுபானக் கடை கண்காணிப்பு பறக்கும் படை அதிகாரி கைது

கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்கள் அரசு மதுபானக் கடைகளை கண்காணிக்கும் சிறப்பு பறக்கும் படை துணை ஆட்சியராக இருப்பவர் குணசேகரன். இவர் சட்டவிரோதமாக மதுபானம் விற்பதற்கும், அனுமதி இல்லாமல் பார் நடத்துவதற்கும், லஞ்சம் பெற்று வருவதாக கோவை லஞ்ச ஒழிப்புத்துறை...

கோவில் பூட்டை உடைத்து ரூ. 1 கோடி மதிப்பிலான ஐம்பொன் சிலை திருட்டு

கோவையில் கோவில் பூட்டை உடைத்து ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஐம்பொன் சிலை திருடப்பட்டுள்ளது. பாப்பநாயக்கன்பாளையத்தில் 300 ஆண்டுகள் பழமையான பட்டத்தரசியம்மன் கோவில் உள்ளது. அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் இக்கோவிலில் நேற்று இரவு பூசைகள் முடிந்த பின் பூசாரிகள் வழக்கம்போல் பூட்டிவிட்டுச்...

தோட்டத் தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணிக்குச் சென்றுவர வனத்துறையினர் அறிவுறுத்தல்

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் தேயிலை தோட்டங்களுக்கு அருகே 50க்கும் அதிகமான யானைகள் முகாமிட்டுள்ள நிலையில், தோட்டத் தொழிலாளர்கள் கவனமுடன் வேலைக்குச் சென்றுவருமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வெள்ளமலை டனல், சின்னகல்லார் நீர் வீழ்ச்சி, நீரார் அணை, நல்லமுடி காட்சி முனை, ஹைபாரஸ்ட்...

பிரதமர் மோடி கோவை வருகை

கோவை வந்தடைந்தார் மோடி பிரதமர் மோடி, தனி விமானத்தின் மூலம் கோவை விமான நிலையம் வந்திறங்கினார் ஹெலிகாப்டர் மூலம் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூருக்கு புறப்பட்டு செல்ல உள்ளார் பெருமாநல்லூரில் அரசு விழாவிலும், கட்சி பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கிறார் மோடி பிரதமர் மோடியை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வரவேற்றார்...

வழி தெரியாமல் தோட்டத்துக்குள் சுற்றித்திரிந்த யானை குட்டி

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே விவசாய நிலத்துக்குள் புகுந்தபோது வழி தெரியாமல் சுற்றித்திரிந்த யானை குட்டியை வனத்துறையினர், அதன் தாய் யானையிடம் பத்திரமாக சேர்த்தனர்.மேட்டுபாளையம் வனச்சரகத்தை ஒட்டியுள்ள நெல்லித்துறையை சேர்ந்த சின்ராஜ் என்பவரது தோட்டத்துக்குள் யானை கூட்டம் புகுந்தது. யானைகள் வனப்பகுதிக்குள் சென்று...

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகள் காத்திருப்பு

சென்னையில் கோயம்பேட்டில் திரண்டிருந்த பயணிகள், புதுச்சேரி, கடலூர் உள்ளிட்ட இடங்களுக்கு பேருந்துகள் இல்லாததால் அவதிக்கு உள்ளாகினர். இன்றும் நாளையும் விடுமுறை நாட்கள் என்பதால், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நேற்று இரவு பயணிகள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. கடலூர், திருவண்ணாமலை, புதுச்சேரி உள்ளிட்ட...