கோவையில் நாளை ஒரே நாளில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பிரசாரம் செய்ய உள்ளதால் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை காலை நீலகிரி மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார். பின்னர் அங்கிருந்து பிற்பகல் 3 மணிக்கு கோவை அவினாசி சாலையில் உள்ள கொடிசியா மைதானத்தில் கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க., பாரதிய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். அதனை தொடர்ந்து ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களுக்கு சென்று பிரசாரம் செய்கிறார்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை காலை 8 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் பிரசார கூட்டத்தில் பேசுகிறார். காலை 10 மணிக்கு கவுண்டம்பாளையத்தில் பிரசாரம் செய்கிறார்.