திமுக ஆட்சிக்கு வந்த உடன் மக்கள் நலப் பணியாளர்கள், சாலைப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கப்படும் - மு.க.ஸ்டாலின்
Published : Mar 31, 2021 11:52 AM
திமுக ஆட்சிக்கு வந்த உடன் மக்கள் நலப் பணியாளர்கள், சாலைப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கப்படும் - மு.க.ஸ்டாலின்
Mar 31, 2021 11:52 AM
மக்கள் நலப் பணியாளர்கள், சாலைப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துதுள்ளார்.
தேனி மாவட்டத்திற்கு உட்பட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், போடிநாயக்கனூர் தொகுதிக்கு என்ன செய்துள்ளார் என்று கேள்வி எழுப்பினார்.
வன்னியர்களுக்கான உள் இடஒதுக்கீடு தற்காலிகமானதுதான் என்றும் ஓபிஎஸ் கூறியதை சுட்டிக்காட்டிய ஸ்டாலின், இந்த விவகாரத்தில் அதிமுக அரசு நாடகமாடுவதாக சாடினார்.
அதிமுக அரசு அறிவித்த திட்டங்களை நிறைவேற்றவில்லை என்று குற்றம்சாட்டய ஸ்டாலின், திமுக தேர்தல் அறிக்கையில் உள்ளதை நிறைவேற்றுவோம் என்று உறுதி அளித்தார். மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கப்படும் என்றும், கண்ணகி கோட்டத்தில் கண்ணகியை வழிபட இரு மாநில அரசுகளும் பேசி ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.
பிரச்சாரத்திற்கு செல்லும் வழியில் திண்டுக்கல் - பழனி சாலையில் நடந்து சென்று ஒட்டன்சத்திரம் தொகுதி திமுக வேட்பாளர் சக்கரபாணிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதரவு திரட்டினார். கடை உரிமையாளர்கள், பொதுமக்களிடம் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் பெரியசாமி, ஒட்டன்சத்திரம் திமுக சட்டமன்ற வேட்பாளர் சக்கரபாணி ஆகியோர் உடன் சென்றனர்.