RECENT NEWS

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் களைகட்டிய பொங்கல் விழா
ராஜ்கோட்டில் தனியார் மைதானத்தில் பயங்கர தீ விபத்து.. 9 சிறார்கள் உட்பட 27 பேர் உயிரிழப்பு

ராஜ்கோட்டில் தனியார் மைதானத்தில் பயங்கர தீ விபத்து.. 9 சிறார்கள் உட்பட 27 பேர் உயிரிழப்பு

May 26, 2024

515

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டிலுள்ள பொழுதுபோக்கு மைதானம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 9 சிறார்கள் உட்பட 27 பேர் உயிரிழந்தனர். டி.ஆர்.பி கேமிங் சோன் என்ற பெயரிலான மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கூடாரத்தில் தீ பிடித்ததாகக் கூறப்படும் நிலையில், காற்றின் வேகத்தில் கூடாரம் சரிந்து ஏராளமானோர் அதற்குள் சிக்கி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.விபத்தில் படுகாயங்களுடன் தப்பிய 20க்கும் மேற்பட்ட சிறுவர்களை மீட்டுள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். விபத்துக்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில், 5 பேர் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.மைதானத்தின் உரிமையாளர் மற்றும் மேலாளர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இங்கிலாந்தில் பொழுதுபோக்குப் பூங்காவில் 70 அடி உயரத்தில் சிக்கிய ரோலர் கோஸ்டர்.. வெளியேற முடியாமல் அந்தரத்தில் தொங்கிய சுற்றுலாப் பயணிகள்..!

இங்கிலாந்தில் பொழுதுபோக்குப் பூங்காவில் 70 அடி உயரத்தில் சிக்கிய ரோலர் கோஸ்டர்.. வெளியேற முடியாமல் அந்தரத்தில் தொங்கிய சுற்றுலாப் பயணிகள்..!

Jul 30, 2023

1235

இங்கிலாந்தில் பொழுதுபோக்குப் பூங்காவில் இயந்திரப் பழுது காரணமாக ரோலர் கோஸ்டர் 70 அடி உயரத்தில் நின்றதால் சுற்றுலாப் பயணிகள் வெளியேற முடியாமல் தவிப்புக்கு ஆளாகினர். எஸக்ஸ் பகுதியில் உள்ள அட்வென்சர் ஐலேண்ட் என்ற பொழுதுபோக்குப் பூங்காவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.ரோலர் கோஸ்டரில் 8 வயது சிறுமி உள்பட 8 பேர் இருந்ததாகவும், விபத்து நேரிட்டபோது சுமார் 40 நிமிடங்கள் அந்தரத்தில் அவர்கள் தொங்கிக் கொண்டிருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பின்னர் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.

'பார்பி' திரைப்படத்தில் வருவது போன்ற பிங் நிற மாளிகை... பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய 3 மாடி கட்டடம்..!

'பார்பி' திரைப்படத்தில் வருவது போன்ற பிங் நிற மாளிகை... பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய 3 மாடி கட்டடம்..!

Jun 27, 2023

3393

ஹாலிவுட் திரைப்படம் பார்பி அடுத்த மாதம் வெளியாக உள்ள நிலையில், அதில் வரும் பிங் நிற மாளிகையை போலவே அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஒரு நிஜ மாளிகை வடிவமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலாவுக்கு பெயர் பெற்ற மலிபு நகரில் கடலை பார்த்தப்படி இந்த 3 மாடி பங்களா அமைந்துள்ளது.நடன அரங்கம், நீச்சல் குளம் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய இந்த மாளிகை சுற்றுலா பயணிகளுக்காக வாடகைக்கு விடப்பட்டு வருகிறது.

உலக பெருங்கோடீஸ்வரர்கள் எலான் மஸ்க், பெர்னார்டு அர்னால்ட் சந்திப்பு... பாரிஸில் ஒன்றாக உணவருந்தி பொழுதுபோக்கினர்

உலக பெருங்கோடீஸ்வரர்கள் எலான் மஸ்க், பெர்னார்டு அர்னால்ட் சந்திப்பு... பாரிஸில் ஒன்றாக உணவருந்தி பொழுதுபோக்கினர்

Jun 17, 2023

1496

உலக பெருங்கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள எலான் மஸ்கும், இரண்டாம் இடத்தில் உள்ள பெர்னார்டு அர்னால்ட்டும் பாரிஸில் ஒன்றாக சேர்ந்து மதிய உணவருந்தினர்.ஆடம்பர பொருட்களுக்கு பெயர் பெற்ற லூயி வீட்டோன் நிறுவனத் தலைவர் பெர்னார்டு அர்னால்ட் உடன் அவரது  இரு மகன்களும் வந்திருந்தனர். எலான் மஸ்க் உடன் அவரது தாயார் வந்திருந்தார்.அதை தொடர்ந்து பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் பங்கேற்ற தகவல் தொழில்நுட்பம் சார்ந்த கருத்தரங்கிற்கு சென்று இருவரும் உரையாற்றினர். இந்த சந்திப்பை தொடர்ந்து இரு பெருங்கோடீஸ்வர்கள் இணைந்து முதலீடு ஏதேனும் செய்வார்களா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

பொங்கல் திருவிழா : மெரினாவில் கூட்டம் கூட்டமாக கூடி கடற்கரை மணலில் அமர்ந்து பொழுதுபோக்கிய பொதுமக்கள்..!

பொங்கல் திருவிழா : மெரினாவில் கூட்டம் கூட்டமாக கூடி கடற்கரை மணலில் அமர்ந்து பொழுதுபோக்கிய பொதுமக்கள்..!

Jan 15, 2023

1864

பொங்கல் திருநாளை ஒட்டி, சென்னை மெரினா கடற்கரையில் குடும்பத்தோடு ஏராளமானோர் குவிந்தனர். வீடுகளில் காலையில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்திய பின்னர், மாலையில் மெரினாவிற்கு வந்த பொதுமக்கள், கடற்கரை மணல் பரப்பில் அமர்ந்து பொழுதுபோக்கினர்.கடலில் இறங்க முடியாதவாறு போலீசார் தடுப்புக்கட்டைகளை அமைத்ததோடு, ஒலிபெருக்கி மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.கலங்கரை விளக்கம் முதல் உழைப்பாளர் சிலை வரை கடலோர காவல் குழுமத்தினர் ரோந்து வாகனத்தில் சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

திடீரென ரோலர் கோஸ்டரில் ஏற்பட்ட இயந்திர கோளாறு.. 160 அடி உயரத்தில் சிக்கிய சுற்றுலா பயணிகள்..!

திடீரென ரோலர் கோஸ்டரில் ஏற்பட்ட இயந்திர கோளாறு.. 160 அடி உயரத்தில் சிக்கிய சுற்றுலா பயணிகள்..!

Aug 06, 2022

3594

ஸ்பெயின் தலைநகர் மாட்ரிடில் பொழுதுபோக்கு பூங்காவில் இயந்திர கோளாறு காரணமாக ரோலர் கோஸ்டரில் பயணித்தவர்கள் அந்தரத்தில் சிக்கினர்.கடந்த 4ம் தேதி சுற்றுலா பயணிகள் 10 பேர் பயணம் செய்த மிகப்பெரிய ரோலர் கோஸ்டர், இயந்திர கோளாறால் 160 அடி உயரத்தில் செங்குத்தாக நின்றது.அப்போது 37 டிகிரி செல்சியஸ் பதிவான வெப்பத்தால் பெரும் சிரமத்திற்குள்ளான சுற்றுலா பயணிகள் ஒரு மணிநேர தாமதத்திற்கு பிறகு பத்திரமாக மீட்டனர்.

சீனாவில் புதிதாக 300 பேருக்கு கொரோனா தொற்று.. பார்கள், பப்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் மூடல்..!

சீனாவில் புதிதாக 300 பேருக்கு கொரோனா தொற்று.. பார்கள், பப்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் மூடல்..!

Jul 06, 2022

1583

கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் சீனாவின் ஷியான் நகரில் புதிதாக கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.சீனாவில் புதிதாக 300 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஷியான் நகரில் பொழுதுபோக்கு பூங்காக்கள், பப்கள், internet cafeகள், பார்களை புதன்கிழமை நள்ளிரவு முதல் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.ஒமைக்ரான் வகையைச் சேர்ந்த BA.5.2 வைரஸ் பரவல் காரணமாகவே சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இட்லிப் மாகாணத்தில் வானில் மின்னிய பால்வீதி மண்டலம்.. கைவிடப்பட்ட பொழுதுபோக்கு பூங்காவை ஒளிரச்செய்தது..!

இட்லிப் மாகாணத்தில் வானில் மின்னிய பால்வீதி மண்டலம்.. கைவிடப்பட்ட பொழுதுபோக்கு பூங்காவை ஒளிரச்செய்தது..!

Jul 01, 2022

1451

சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் வானில் மின்னிய பால்வீதி மண்டலம், டைம் லாப்ஸ் முறையில் படமாக்கப்பட்டுள்ளது.அல் நய்ரப் நகரத்தில் அரசுப்படைகள் இருக்கும் பகுதிக்கும், கிளர்ச்சிப்படைகள் இருக்கும் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள கைவிடப்பட்ட மற்றும் அழிவுக்குள்ளான பொழுதுபோக்கு பூங்காவை பால் வீதி ஒளிரச்செய்தது போன்று அந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.

அரசு சார்பில் நடத்தப்பட்டு வரும் பொழுதுபோக்கு கண்காட்சி.. பார்வையாளர்களை கவர்ந்து வரும் பன்றிகளுக்கான ஓட்டப்பந்தயம்..!

அரசு சார்பில் நடத்தப்பட்டு வரும் பொழுதுபோக்கு கண்காட்சி.. பார்வையாளர்களை கவர்ந்து வரும் பன்றிகளுக்கான ஓட்டப்பந்தயம்..!

Jun 26, 2022

1439

அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் அரசு சார்பில் நடத்தப்பட்டு வரும் பொழுதுபோக்கு கண்காட்சியில் பன்றிகளுக்கான ஓட்டப்பந்தயம் பார்வையாளர்களை கவர்ந்தது.பொழுதுபோக்கு கண்காட்சியானது கடந்த வியாழக்கிழமை தொடங்கிய நிலையில் ஜூலை மாதம் முதலாவது வாரம் வரை நடைபெற உள்ளது.பல்வேறு விளையாட்டுக்கள் மற்றும் பொருட்கள் விற்பனைக் கடைகள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்காவால் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் 200கோடி மதிப்புள்ள அரசு நிலங்கள் மீட்பு

குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்காவால் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் 200கோடி மதிப்புள்ள அரசு நிலங்கள் மீட்பு

Jun 25, 2022

2462

சென்னையை அடுத்த பூவிருந்தவல்லி அருகே செயல்பட்டு வரும் குயின்ஸ் லேண்ட் பொழுதுபோக்கு பூங்காவால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பிலான 32.41 ஏக்கர் அரசு நிலத்தை மீட்ட வருவாய்த்துறையினர், அங்கு செயல்பட்டு வந்த சொகுசுவிடுதி உள்பட பல்வேறு கட்டடங்களுக்கு சீல் வைத்தனர்.பாப்பான்சத்திரத்தில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பொழுதுபோக்கு பூங்காவில், அரசுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமித்த புகாரில் அறநிலையத்துறை நோட்டீஸ் அனுப்பியது.அந்த நோட்டீசை உயர்நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், பொழுதுபோக்கு பூங்காவில் ஆக்கிரமிப்பில் இருந்த 32.41 ஏக்கர் நிலத்தை மீட்ட அதிகாரிகள், அங்கு செயல்பட்டு வந்த நீச்சல் குளம், வாட்டர் பார்க், 5 சொகுசு விடுதிகள் உள்ளிட்டவற்றுக்கு சீல் வைத்தனர்.

அமெரிக்காவில் பொழுதுபோக்கு பூங்காவில், எந்திரக்கோளாறு காரணமாக ராட்டினத்தில் பயணம் செய்த பயணிகள்.!

அமெரிக்காவில் பொழுதுபோக்கு பூங்காவில், எந்திரக்கோளாறு காரணமாக ராட்டினத்தில் பயணம் செய்த பயணிகள்.!

Jun 04, 2022

3830

அமெரிக்காவில் பொழுதுபோக்கு பூங்காவில், எந்திரக்கோளாறு காரணமாக ராட்டினத்தில் பயணம் செய்த  பயணிகள் அந்தரத்தில் தவித்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.பென்சில்வேனியா மாகணத்தில் உள்ள கென்னிவுட் பொழுதுபோக்கு பூங்காவில், ஏரோ 360 என்ற வகை ராட்டினத்தில் பயணம் மேற்கொண்ட சுற்றுலா பயணிகள், எந்திரக்கோளாறு ஏற்பட்டதால் அந்தரத்தில் தவித்தனர்.பூங்கா ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு பயணிகளை மீட்டு சிகிச்சை அளித்தனர்.

இரு பொழுதுபோக்கு படகுகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 5 பேர் பலி.. காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரம்!

இரு பொழுதுபோக்கு படகுகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 5 பேர் பலி.. காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரம்!

May 30, 2022

2801

அமெரிக்கா ஜார்ஜியா மாகாணத்தில் இரு பொழுதுபோக்கு படகுகள் நேருக்கு நேர் மோதி கவிழ்ந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.வார இறுதி நாளையொட்டி வில்மிங்டன் நதியில் பொது மக்கள் பொழுதுபோக்கு நிகழ்வுகளில் ஈடுபட்டனர்.அப்போது எதிர்பாராத விதமாக இரு படகுகள் நேருக்கு நேர் மோதி நதியில் கவிழ்ந்தது. நீரில் மூழ்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு 5 பேர் உயிரிழந்தனர்.4 பேர் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், காணாமல் போனவர்களை தேடும் பணியில் அமெரிக்க கடலோர காவல் படை நீச்சல் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மதுரைக்கே சிறந்த பொழுதுபோக்கு 'செல்லூர் ராஜூ' தான் என கலாய்த்த அமைச்சர் தங்கம் தென்னரசு.!

மதுரைக்கே சிறந்த பொழுதுபோக்கு 'செல்லூர் ராஜூ' தான் என கலாய்த்த அமைச்சர் தங்கம் தென்னரசு.!

May 06, 2022

2689

மதுரைக்கே சிறந்த பொழுதுபோக்கு 'செல்லூர் ராஜூ' தான் என அமைச்சர் தங்கம் தென்னரசு பேரவையில் கூறியதால் கட்சி வேறுபாடின்றி உறுப்பினர்கள் சிரித்தனர்.கேள்வி நேரத்தின் போது பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தை சுற்றுலாத்தலமாக அறிவித்து அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.மேலும், மதுரையில் பொழுதுபோக்கிற்கு இடமே இல்லை என்றும் அவர் கூறினார். அப்போது குறுக்கிட்ட தங்கம் தென்னரசு, மதுரைக்கே சிறந்த பொழுதுபோக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தான் என நகைச்சுவையாக கூறினார்.

கார்கீவ் நகரை சுற்றி வளைத்து ரஷ்ய படைகள் தாக்குதல்.. பூங்கா மீது ரஷ்ய படைகள் ராக்கெட் தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள்

கார்கீவ் நகரை சுற்றி வளைத்து ரஷ்ய படைகள் தாக்குதல்.. பூங்கா மீது ரஷ்ய படைகள் ராக்கெட் தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள்

May 05, 2022

3009

உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவில் உள்ள பொழுதுபோக்கு பூங்கா மீது ரஷ்ய படைகள் ராக்கெட் தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.மத்திய கார்கிவ் பகுதியில் உள்ள Amusement park மீது ரஷ்ய படைகள் க்ராட் ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளது. ரஷ்ய படைகளின் இந்த தாக்குதலுக்கு பெண் ஒருவர் படுகாயம்டைந்த நிலையில், 7 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் பற்றி எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">This was just a beautiful park in <a href="https://twitter.com/hashtag/Kharkiv?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Kharkiv</a>. Yesterday it was destroyed . Just because. <a href="https://twitter.com/hashtag/Russia?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Russia</a>&rsquo;s hate of <a href="https://twitter.com/hashtag/Ukraine?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Ukraine</a> remains unfathomable to me <a href="https://t.co/unOIQ3VQ9f">pic.twitter.com/unOIQ3VQ9f</a></p>&mdash; Lesia Vasylenko (@lesiavasylenko) <a href="https://twitter.com/lesiavasylenko/status/1521921826309521408?ref_src=twsrc%5Etfw">May 4, 2022</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

BIG STORIES

கையில் அரிவாளுடன் மனைவி நடிகர் வேல ராமமூர்த்தியின் 
ஒற்றை சவுண்டு.. நடந்தது என்ன ? இப்படி கட்டினா எப்படி போறது ?

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved. Designed and Developed by Polimer News