RECENT NEWS

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளர் அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளர் அறிவிப்பு

Jan 11, 2025

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளர் அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளர் அறிவிப்பு

Jan 11, 2025

BIG STORIES

காதலன் மீது கொலை வெறி.. செல்போன் நிறுவன பெண் ஊழியர் செய்த கொடூர செயல்..! 23 வயது எப்படி 16 ஆனது ?

Jan 11, 2025 01:34 AM

20

25

காதலன் மீது கொலை வெறி.. செல்போன் நிறுவன பெண் ஊழியர் செய்த கொடூர செயல்..! 23 வயது எப்படி 16 ஆனது ?

காதலன் மீது கொலை வெறி.. செல்போன் நிறுவன பெண் ஊழியர் செய்த கொடூர செயல்..! 23 வயது எப்படி 16 ஆனது ?

காஞ்சிபுரத்தில் காதலில் விழுந்து கர்ப்பமானதால், அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பெற்ற தனியார் செல்போன் நிறுவன பெண் ஊழியர், பச்சிளம் குழந்தையை பாழுங்கிணற்றில் வீசிக்கொலை செய்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

செங்கல்பட்டில் தனியாக வீடு எடுத்து, செல்போன் உதிரி பாகம் தயாரிக்கும் நிறுவனத்தில் அந்த பெண் பணிபுரிந்து வந்தார்.

காஞ்சிபுரத்தில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு சென்ற இடத்தில் வயிற்றுவலி என்று அவர் கூறியதால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

திருமணமாகாத அவர் தான் கர்ப்பமாக இருப்பதாக கூறியதால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், வழியில் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து அதில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அவருக்கு 16 வயது என்றும் காதலன் ஏமாற்றி கர்ப்பமாக்கி விட்டு சென்றுவிட்டதாகவும் மருத்துவர்களிடம் கூறி பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. உறவினர்கள் எல்லாம் அந்த பெண்ணை திட்டி தீர்த்த நிலையில் அதிகாலை 4 மணி அளவில் தனக்கு பிறந்த ஆண் குழந்தையுடன் அவர் மாயமானார்.

மருத்துவமனையில் அவருடன் தங்கி இருந்த தாய் தனது மகளையும், பச்சிளம் குழந்தையையும் காணவில்லை என்று போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் அவரை கண்டுபிடித்தனர்.

அவர் துணியில் சுற்றி எடுத்துச்சென்ற பச்சிளம் குழந்தையை எங்கே என்று விசாரித்தனர். தன்னை ஏமாற்றியவனுக்கு பிறந்த குழந்தையை வளர்க்க விரும்பாததால் மன உளைச்சலில் கிணற்றில் வீசிவிட்டதாக கூறி, அந்த பாழுங்கிணற்றையும் போலீசாரிடம் அடையாளம் காட்டினார்.

23 வயது ஆகும் நிலையில் அந்த பெண் தனது இளைய சகோதரியின் அடையாள அட்டையை கொடுத்து மருத்துவமனையில் 16 வயது என்று ஏமாற்றியது தெரியவந்ததால் போலீசார் கூடுதல் அதிர்ச்சி அடைந்தனர்.

விசாரணையில் தன்னுடன் பணிபுரிந்து வந்த திண்டிவனத்தை சேர்ந்த இளைஞருக்கும், தனக்கும் மலர்ந்த காதல் எல்லை மீறியதால் தான் கர்ப்பமானதாக தெரிவித்தார்.

தான் கர்ப்பமானதை அறிந்ததும் அந்த இளைஞர் தன்னை ஏமாற்றி சென்று விட்டதாகவும், தான் ஒல்லியாக இருந்ததால் ஜெர்க்கின் அணிந்து கர்ப்பத்தை மறைத்ததாகவும் தெரிவித்தார்.

கொலை வழக்கில் அப்பெண்ணை கைது செய்த போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக அவரது காதலனிடமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரணை மேற்கொண்டனர்.

படிக்கின்ற போதும், பணியின் போதும் நட்பாக பழகி காதலில் விழும் பெண்கள், தனது காதலனை எல்லை மீற அனுமதித்தால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவம் மற்றும் ஒரு உதாரணம்.!

SHARE

shareshareshareshare

RELATED POSTS

BIG STORIES

காதலன் மீது கொலை வெறி.. செல்போன் நிறுவன பெண் ஊழியர் செய்த கொடூர செயல்..! 23 வயது எப்படி 16 ஆனது ?

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved. Designed and Developed by Polimer News