​​
Polimer News
Polimer News Tamil.

ஏடிஎம்-ல் நிரப்ப கொண்டு சென்ற பணத்தை திருடிய நபர்... 24 மணி நேரத்தில் கைது செய்த காவல்துறை.!

கர்நாடக மாநிலம் பெல்லாரியில், ஏடிஎம்மில் நிரப்ப கொண்டு சென்ற 56 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச்சென்ற நபரை போலீசார் கைது செய்தனர். சிஎஸ்எம் நிறுவனத்தில் காப்பாளராக பணிபுரிந்து வந்த நீலகண்டா என்பவர் ஏடிஎம்மில் நிரப்ப கொண்டு சென்ற பணத்தை திருடியதாக...

ஹிந்தி உட்பட 12 மொழிகளில் திருக்குறள்... ஜூன் மாதத்தில் வெளியாகும் என தகவல்.!

திருக்குறளை மொழிப்பெயர்க்கும் பணிகள் முடிவடைந்து அச்சிடும் பணிகள் நடைபெறுவதாகவும், வரும் ஜூன் மாதத்தில் 12 மொழிகளில் திருக்குறள் வெளியிடப்படும் என செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய அந்நிறுவனத்தின் இயக்குனர் சந்திரசேகர், திருக்குறளை அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிபெயர்த்து...

கர்நாடகாவில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த தாய்..!

கர்நாடக மாநிலம் ஷிமோகா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்துள்ளன. தடாசா கிராமத்தைச் சேர்ந்த ஆரிப் என்பவரது மனைவி, அல்மாஜா பானு கர்ப்பம் தரித்திருந்த நிலையில், பரிசோதனையில் வயிற்றில் 4 குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. நேற்று...

கொரோனா மரணங்கள் குறித்த உலக சுகாதார அமைப்பின் அறிக்கைக்கு மத்திய அமைச்சர் மான்சுக் மாண்டவியா ஆட்சேபம்..!

கொரோனா மரணங்கள் குறித்து உலக சுகாதார அமைப்பின் அறிக்கைக்கு இந்தியா பலத்த ஆட்சேபம் தெரிவித்துள்ளது. ஜெனிவாவில் நடைபெற்ற 75 வது உலக சுகாதார சபையின் கூட்டத்தில் பேசிய மத்திய சுகாதார அமைச்சர் மான்சுக் மாண்டவியா, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் கருத்துகள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக கூறினார். நோய்ப்...

தலைநகர் டெல்லியில் இடியுடன் கூடிய கனமழை ; மோசமான வானிலை காரணமாக விமானப் போக்குவரத்து பாதிப்பு

தலைநகர் டெல்லியில், கடந்த சில நாட்களாக கடும் வெப்பம் வாட்டி வந்த நிலையில், நேற்றிரவு பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. சூறைக்காற்றுடன் பெய்த மழையினால் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சில விமானங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. சில இடங்களில்...

ஷாங்காய் நகரில் தெருக்களில் ஆள் நடமாட்டமே இல்லாத காட்சிகள்.. மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத அளவிற்கு கடும் கட்டுப்பாடுகள்..!

சீனாவின் வர்த்த தலைநகரான ஷாங்காயில் அமல்படுத்தப்பட்ட கடுமையான ஊரடங்கு நீடிக்கப்படுவதால், தெருக்களில் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. அந்நாட்டில், கொரோனா தொற்று பரவல் அதிகரித்த நிலையில், பல்வேறு நகரங்களில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், ஷாங்காயில் கணிசமான தொற்று பாதிப்புகள் பதிவாகி வரும் நிலையில், பல...

இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் புதிய வலுவான செயல்பாடு தொடங்கி உள்ளது - பிரதமர் மோடி

குவாட் அமைப்பின் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் புதிய வலுவான செயல்பாடு தொடங்கியிருப்பதாக தெரிவித்தார். ஜனநாயக நாடுகளுக்கு புதிய ஆற்றல் பிறந்திருப்பதாக தமது பேச்சில் பிரதமர் குறிப்பிட்டார்.  குவாட் உச்சி மாநாடு டோக்கியோ நகரில் இன்று காலை இந்திய...

கியானவாபி மசூதி பற்றிய ஆய்வறிக்கை மீது இன்று வாரணாசி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

வாரணாசியின் கியானவாபி மசூதிக்குள் ஆய்வு நடத்திய பின் ஆய்வு தகவல்களை ஊடகங்களுக்கு கசிய விட்டதற்காக மாற்றப்பட்ட ஆணையர் அஜய் மிஸ்ராவின் அறிக்கை மீது இன்று வாரணாசி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. இவ்வழக்கை உச்சநீதிமன்றம் மாவட்ட நீதிமன்றம் விசாரணை நடத்த உத்தரவிட்டு...

போர் உள்ளிட்ட காரணங்களால் உலகம் முழுவதும் இடம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 10 கோடியாக உயர்வு - ஐ.நா தகவல்

உலகம் முழுவதும் போர் உள்ளிட்ட காரணங்களால் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி இடம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 10 கோடியாக உயர்ந்துள்ளது. இதுகுறித்து ஐ.நா.அகதிகளுக்கான முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில், போர், வன்முறை, மனித உரிமை மீறல்கள், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பல பகுதிகளை சேர்ந்த...

ஈரானில் 10 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து.. 5 பேர் பலி..!

ஈரானின் தெற்கு நகரமான அபாடானில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். மேலும், இடிபாடுகளில் சிக்கியுள்ள 80 பேரை மீட்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. அபாடானில் உள்ள 10 அடுக்கு கட்டிடம் நேற்று திடீரென இடிந்து...