​​
Polimer News
Polimer News Tamil.

"உக்ரைன் கதை முடிந்தது; போலந்து தான் அடுத்த இலக்கு" ரஷ்ய அதிபர் புதினின் ஆதரவாளர் ராம்ஜான் கடிரோவ் எச்சரிக்கை

உக்ரைனுக்கு அடுத்தபடியாக போலந்து நாட்டை தாக்க திட்டமிட்டிருப்பதாக ரஷ்ய ஆதரவாளரும் செசன்ய குடியரசு தலைவருமான ராம்ஜான் கடிரோவ் (Ramzan Kadyrov) எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், உக்ரைனின் கதை முடிந்து விட்டது எனவும் போலந்தின் மீது தாக்குதல் நடத்த...

உக்ரைனில் போர் விமானங்களுக்கு என்ஜின் தயாரிக்கும் பட்டறைகள் மீது ரஷ்ய படைகள் தாக்குதல்.!

உக்ரைனின் பழமைவாய்ந்த மோட்டார் சிச் நிறுவனத்தின் உற்பத்தி பட்டறைகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இகோர் கொனாஷென்கோவ் தெரிவித்துள்ளார். மோட்டார் சிச் நிறுவனம் சோவியத் காலத்தில் இருந்து உக்ரைன் விமானப்படைகளின் போர் விமானங்களுக்கு என்ஜின்களை தயாரித்து...

பெருமாள் கோவிலில் கொடிமரம் அமைப்பது தொடர்பாக இரு தரப்பினர் இடையே மோதல்.!

கடலூர் மாவட்டம் சேவூர் கிராமத்தில் உள்ள பெருமாள் கோவிலில் கொடிமரம் அமைப்பது தொடர்பாக இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அந்த பெருமாள் கோவிலில் உள்ள பழைய கொடிமரத்தை அகற்றி விட்டு புதிய கொடி மரத்தை ஊன்ற கோவில் திருப்பணி...

பிரதமர் மோடி பங்கேற்ற விழாவில், 5 கோரிக்கைகளை முன்வைத்த முதலமைச்சர்

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட 5 கோரிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமரிடம் முன் வைத்துள்ளார். சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்ற விழாவில் பேசிய அவர், தி.மு.க. அரசு பொறுப்பு ஏற்ற பின்னர் பிரதமர்...

வணக்கம் என தமிழில் கூறி தன் உரையை ஆரம்பித்த பிரதமர் மோடி..!

சென்னையில் நடைபெற்ற விழாவில் 31 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, தரமான உள்கட்டமைப்பை உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார். ஐதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம்...

மற்ற விரல்களை போலவே மனிதர்கள் கைகளில் இயங்கும் ஆறாவது ’ரோபோ’ விரல்..!

ஜப்பானின் டோக்கியோ நகரத்தில் மனிதர்கள் கைவிரல்களை போல செயல்படும் ரோபோ விரலை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். 6-வது விரலாக கைளில் பொறுத்தப்பட்டுள்ள ரோபோ விரல், மற்ற விரல்களை போல பணிகளை செய்கிறது. தசைகளில் இருந்து வரும் மின் சமிக்ஞைகள் கையில் பொறுத்தப்பட்டுள்ள நான்கு சென்சார்...

விருத்தாசலத்தில் திருமணம் செய்ய மறுத்த இளம்பெண்ணை கல்லால் அடித்துக் கொலை செய்ய முயன்ற இளைஞர் கைது.!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே திருமணம் செய்ய மறுத்த இளம்பெண்ணை கல்லால் அடித்துக் கொலை செய்ய முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். கார்மாங்குடியைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவனும், குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த இளம்பெண்ணும் பழகி வந்துள்ளனர். திருமணம் செய்து கொள்ள ஸ்ரீதர் விருப்பம்...

காவல்நிலையம் அருகே பிரபல ரவுடி கொடூரமாக வெட்டிக் கொலை; முன்விரோதம் காரணமாக வீடு புகுந்து கொலை கும்பல் வெறிச்செயல்

புதுச்சேரியில் காவல்நிலையம் அருகே வீடு புகுந்து பிரபல ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர். கருவடிக்குப்பத்தை சேர்ந்த ரவுடி சரத் என்கிற பொடிமாஸ், அரியாங்குப்பம் காவல்நிலையம் பின்புறம் உள்ள தனது சகோதரி வீட்டில் தங்கியிருந்துள்ளார். அதிகாலையில் வீடு...

அன்னதானத்தின் போது நரிக்குறவர்களை தரையில் அமரவைத்து அன்னதானம் வழங்கியதாக புகார் - இருவர் சஸ்பெண்ட்

மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோவிலில், அன்னதானத்தின் போது நரிக்குறவர்களுக்கு பாரபட்சம் காட்டியதாக கோவில் செயல் அலுவலரும், சமையலரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இக்கோவிலில் கடந்த ஆண்டு அன்னதானம் சாப்பிட வந்த நரிக்குறவர் பெண் விரட்டி அடிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அனைவருக்கும் சமபந்தி விருந்து...

மதுரை ஆவினில் முறைகேடாக பணி நியமனம் பெற்றதாக எழுந்த புகார்.. 30 பேரிடம் தீவிர விசாரணை.!

மதுரை ஆவினில் 2020-21-ம் ஆண்டில் பணி நியமனம் பெற்ற 30 பேரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த ஆண்டில் நடைபெற்ற மேலாளர் உள்ளிட்ட 61 பணியிட நியமனங்களில், முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்த நிலையில், அது குறித்து ஆவின் லஞ்ச ஒழிப்புத்துறை...