​​
Polimer News
Polimer News Tamil.

திருமலையில் பிளாஸ்டிக் பயன்படுத்த இன்று முதல் தடை..!

திருமலையில் பிளாஸ்டிக் பயன்படுத்தவும் விற்பனை செய்யவும் இன்று முதல் தடை விதித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் உத்தரவிட்டுள்ளது. அதன் படி, பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், பைகள், கவர்கள் பயன்படுத்த முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, அலிபிரி சோதனைச் சாவடியில் ஆய்வு செய்த பிறகே பிளாஸ்டிக்...

மே மாதத்தில் ஜிஎஸ்டி மூலம் 1,40,885 கோடி ரூபாய் வருவாய்-மத்திய நிதியமைச்சகம்

மே மாதத்தில் ஜிஎஸ்டி மூலம் ஒரு இலட்சத்து 40 ஆயிரத்து 885 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலத்தைவிட 44 விழுக்காடு அதிகமாகும். மார்ச், ஏப்ரல், மே ஆகிய மூன்று மாதங்களும் தொடர்ந்து...

மாநிலங்களவைத் தேர்தல்: தமிழகத்தில் இருந்து தாக்கல் செய்யப்பட்ட 6 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு!

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட திமுக, அதிமுக, காங்கிரஸ் சார்பில் தாக்கல் செய்த 6 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. வேட்பு மனுக்களின் பரிசீலனை தமிழகச் சட்டப்பேரவைச் செயல் சீனிவாசன் தலைமையில் இன்று நடைபெற்றது. அப்போது திமுகவின் கிரிராஜன், கல்யாண சுந்தரம், ராஜேஷ்குமார்,...

பாகிஸ்தானில் நெய், சமையல் எண்ணெய் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்வு..!

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியால் சமையல் எண்ணெய் மற்றும் நெய் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் பாகிஸ்தானில் சில நாட்களுக்கு முன்பு பெட்ரோல், டீசல் விலையும் கடுமையாக உயர்ந்தது. இந்நிலையில் இன்று சமையல் எண்ணெய் விலை லிட்டருக்கு 213...

தெற்கு மற்றும் கிழக்கு ஆஸ்திரேலியாவில் கடும் பனிப்பொழிவு.. பனிச்சறுக்கு விளையாடி மகிழும் ஆஸ்திரேலியர்கள்!

தெற்கு மற்றும் கிழக்கு ஆஸ்திரேலியாவின் பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. அந்நாட்டில் குளிர்காலம் தொடங்கிய நிலையில், கடந்த சில நாட்களாக பலத்த காற்றுடன் கூடிய பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் விக்டோரியா, டாஸ்மேனியா உள்ளிட்ட மாகாணங்களில் சாலைகளிலும் குடியிருப்புகளிலும் பனிபடர்ந்து வெண்போர்வை போர்த்தியது...

பாடகர் கே.கே உடலுக்கு மம்தா பானர்ஜி நேரில் அஞ்சலி

பாடகர் கே.கே உடலுக்கு மம்தா பானர்ஜி நேரில் அஞ்சலி துப்பாக்கி குண்டுகள் முழங்க கே.கே உடலுக்கு மரியாதை கொல்கத்தாவில், பாடகர் கே.கே. உடலுக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் அஞ்சலி முதல்வர் மம்தா அறிவித்தபடி, பாடகர் கே.கே உடலுக்கு, மேற்குவங்க அரசு சார்பில் துப்பாக்கி...

வரும் 2026ம் ஆண்டு பாமக தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும் - அன்புமணி ராமதாஸ் பேட்டி.!

வரும் 2026ம் ஆண்டு பாமக தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி இதனை தெரிவித்தார்....

உக்ரைனின் செவரோடொனட்ஸ்க் நகர ரசாயன ஆலை மீது ரஷ்யா தாக்குதல்.!

உக்ரைன் நாட்டின் செவரோ-டொனெட்ஸ்க் நகரில் உள்ள ரசாயன ஆலை மீது ரஷ்ய படைகள் வான் தாக்குதல் நிகழ்த்தியதால் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என எச்சரிக்கப்பட்டனர். தொழிற்சாலைகள் நிறைந்த செவரோ-டொனெட்ஸ்க் நகரின் பெரும்பகுதி ரஷ்ய படைகள் வசம் சென்றது. அங்குள்ள ரசாயன...

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக் கூடும் - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது. ஜூன் 3, 4,...

பெண் தூக்கிட்டு தற்கொலை.. மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி மருமகனின் மீது பெண்ணின் தாயார் புகார்..!

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படும் விவகாரத்தில் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு போலீசார் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலக் கோட்டையூர் காவலர் குடியிருப்பில் வசித்து வரும் தனியார் கல்லூரியின் துறை முதல்வரான வெங்கடேஷ்...