​​
Polimer News
Polimer News Tamil.

தஞ்சாவூர் மாவட்டம் மனோராவில் அமைகிறது சர்வதேச கடற்பசு பாதுகாப்பு மையம்

தஞ்சாவூர் மாவட்டம், மனோரா கடற்கரைப் பகுதியில் 15 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ள சர்வதேச கடற்பசு பாதுகாப்பு மையத்திற்கான மாதிரி படங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பொதுமக்களை முழுவதுமாக அனுமதிக்கும் பகுதியில் அருங்காட்சியகம், 4டி அரங்கம், பூங்கா, உணவகம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களும்,...

பீரோ பட்டறை அதிபர் காரை மறித்து படுகொலை.. கொலைக் கைதிக்கு பண உதவி செய்ததால் ஆத்திரம் என தகவல்..!

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் பீரோ பட்டறை நடத்தி வரும் பட்டறை சரவணன் என்பவர் பனங்காடு என்ற பகுதியில் காரில் சென்ற போது வழி மறித்த மர்மகும்பல் ஒன்று அவரை காரில் இருந்து இழுத்துபோட்டு சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. சம்பவ இடத்துக்கு விரைந்த...

நெஞ்சுவலியால் கீழே விழுந்த வாகன ஓட்டியை காப்பாற்றிய போக்குவரத்து போலீசார்.. பாராட்டு, வெகுமதி அளிப்பு..!

நெஞ்சுவலி ஏற்பட்டு கீழே விழுந்த இருசக்கர வாகன ஓட்டியை தூக்கிச் சென்று மருத்துவமனையில் அனுமதித்து உயிரை காப்பாற்றிய சென்னை, துரைப்பாக்கம் போக்குவரத்து போலீசாரை சென்னை பெருநகர போக்குவரத்து காவல் தெற்கு மண்டல துணை ஆணையாளர் பண்டி கங்காதர் நேரில் அழைத்து பாராட்டினார். கடந்த...

விளையாட்டு வீராங்கனைக்கு ஆபாசப் படங்களை அனுப்பிய நபர் - கைது செய்த சென்னை போலீசார்..

தமிழகத்தைச் சேர்ந்த பெண் விளையாட்டு வீராங்கனை ஒருவரது வாட்சப் எண்ணுக்கு அவரது புகைப்படத்தையே ஆபாசமாக மார்பிங் செய்து அனுப்பி தொல்லை செய்து வந்ததாக பெங்களூருவைச் சேர்ந்த சாசிலி சிவா தேஜா என்ற இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான். அவனது எண்ணை வீராங்கனை பிளாக்...

நீர் வழி ஆக்கிரமிப்பு என்றால் உயர் நீதிமன்ற மதுரை கிளையை அகற்ற வேண்டும் - செல்லூர் ராஜூ

மதுரை மாநகராட்சி செல்லூர் பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிகளை ஆய்வு மேற்கொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, பணிகள் ஏன் மந்தமாக நடக்கிறது என்று அதிகாரிகளை கடிந்து கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜு, நீர்பிடிப்பு பகுதிகளின் ஆக்கிரமிப்புகளை...

கடலூரில் 20 அடி மூங்கிலில் பிரியாணி சமையல் செய்த கல்லூரி மாணவர்கள் சாதனை..

கடலூரில் 20 அடி மூங்கிலில் பிரியாணி செய்த தனியார் கேட்டரிங் கல்லூரி மாணவர்களின் முயற்சி கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம் பெற்று சாதனை படைத்தது. தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 20 அடி மூங்கிலை வெட்டி சுத்தம் செய்து குடுவை...

பழங்குடியினர் இடையே மோதலை ஏற்படுத்துவதே காங்கிரஸ் கொள்கை - மோடி

நாட்டில் உள்ள அனைத்து பழங்குடியின சமூகத்தினர் இடையே மோதலை ஏற்படுத்துவதுதான் காங்கிரஸ் கட்சியின் கொள்கை என பிரதமர் மோடி தெரிவித்தார். மகாராஷ்டிரா மாநிலம் துலேயில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், மகாராஷ்டிராவில் அமைந்துள்ள காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாடி, சக்கரங்களும்...

த.வெ.க மாநாடு நடத்த இடம் வழங்கிய விவசாயிகளை கௌரவிக்கம் தலைவர் விஜய்..

விழுப்புரம் மாவட்டம், வி. சாலையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு இடம் வழங்கிய விவசாயிகளை அக்கட்சித் தலைவர் விஜய் நேரில் அழைத்து கௌரவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநாட்டு திடல் அமைக்க 80 ஏக்கர் மற்றும் வாகன நிறுத்தத்திற்கு 150 ஏக்கர்...

தமிழக அரசின் SETC பேருந்துகளுக்கு பம்பை வரை அனுமதி..

தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக SETC பேருந்துகள் பம்பையில் இருந்து புறப்பட கேரள அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் இருந்து பயணிகளை ஏற்றி செல்லும்போது பம்பை வரை செல்லும் தமிழகப் பேருந்துகள் திரும்பும்போது நிலக்கல்லில் இருந்தே புறப்படும். இதனால்...

இன்ஸ்டா காதலனுடன் பைக்கில் இருந்து தவறி விழுந்து சிறுமி உயிரிழப்பு - போலீஸ் விசாரணை

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே 10 ஆம் வகுப்பு முடித்து விட்டு வீட்டில் இருந்த சிறுமி ஒருவர், இஸ்டாகிராம் மூலம் சித்தோடு தயிர்பாளையத்தை சேர்ந்த சுனில் என்ற 22 வது இளைர்க்கு ஒரு வாரத்துக்கு முன்பு அறிமுகமாயியுள்ளாள். இவர்கள் பைக்கில் பர்கூர்...