​​
Polimer News
Polimer News Tamil.

பா.ம.கவில் மூத்தவர்களை தள்ளிவிட்டு அன்புமணி ஏன் தலைவர் ஆனார்?.. அன்புமணிக்கு அமைச்சர் சிவசங்கர் கேள்வி..

பா.ம.க.விற்காக அன்றுதொட்டு இன்றுவரை உழைத்து வரும் G.K.மணி, AK மூர்த்தி போன்ற மூத்த தலைவர்கள் இருந்தும் அன்புமணி ராமதாஸ் தலைவரானது எப்படி? என அமைச்சர் சிவசங்கர் கேள்வி எழுப்பியுள்ளார். துரைமுருகனை ஏன் துணை முதலமைச்சராக்கவில்லை என அன்புமணி கேட்டிருந்த நிலையில் சிவசங்கர் இவ்வாறு...

கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக சூர்யா 44 படத்திற்கு பெயர் மற்றும் டீசரும் வெளியீடு..

கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக சூர்யா 44 படத்திற்கு ரெட்ரோ என்ற பெயிரிடப்பட்டு டீசரும் வெளியிடப்பட்டுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கிறார்....

கழுகின் மீது பொருத்தப்பட்ட ஜி.பி.எஸ் கருவி?.. கழுகின் நடமாட்டம் குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை..

பண்ருட்டி அடுத்துள்ள சித்திரைச்சாவடி பகுதிக்கு வந்த "பாரு" வகை கழுகின்காலில் பிளாஸ்டிக்கால் ஆன பட்டைகள், முதுகில் ஜி.பி.எஸ் கருவி போன்ற பொருள் பொருத்தப்பட்டிருந்தாக சந்தேகம் எழுப்பப்பட்டது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று வீடு மீது அமர்ந்த கழுகை அப்பகுதி...

அரசு பேருந்து ஓட்டுனரின் அஜாக்கிரதையால் சாலையின் இருந்த மீடியேட்டரின் மீது மோதி விபத்து..

ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து நாமகிரிப்பேட்டைக்கு சென்ற அரசுப்பேருந்து சாமுண்டி தியேட்டர் அருகே வளைவில் திரும்பியபோது எதிர்பாராத விதமாக மீடியேட்டர் மீது மோதி விபத்துக்குள்ளானது. அப்போது சாலையின் நடுவே பேருந்து நிற்பதாகக் கூறி ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டட இளைஞர் அங்கிருந்தவர்களால் தாக்கப்பட்டார். ...

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு பாலியல் சீண்டல்.. போலீசார் விசாரணை..

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று இரவு ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த மாணவியை அடையாளம் தெரியாத சிலர் பாலியல் ரீதியாக சீண்டி தொந்தரவு கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அண்ணா பல்கலைக்கழக விடுதியில் தங்கி படித்து வரும்...

திருச்செந்தூர் கோவிலில் ஆட்டம் போட்ட ரீல்ஸ் பிரபலம்.. பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தி நடனமாடியதாக பெண் மீது புகார்..

திருச்செந்தூர் கோவிலில் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ரீல்ஸ் வீடியோ எடுத்தாக இன்ஸ்டா பிரபலம் மீனவப் பொண்ணு சுபி என்ற சுபிக்சா மீது புகார் எழுந்துள்ளது. முருகன் கோவில் கடற்கரை, கிரி பிரகாரம் உள்ளிட்ட பகுதிகளில் சினிமா பாடலுக்கு நடனம் ஆடி...

விமான நிலையத்தில் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறையினர் சோதனை... ரூ 4.36 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு கரன்சி பறிமுதல்

திருச்சி விமானநிலையத்தில் இருந்து கொழும்பு செல்ல இருந்த இலங்கை விமானப் பயணியிடமிருந்து 4 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 8000 ஆஸ்திரேலியன் டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்டது....

கிறிஸ்துமஸ் விழாவை ஆட்டம்பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்

கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி, கிறிஸ்தவ தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. சென்னை சாந்தோம் பேராலயம், பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலயம் உள்ளிட்ட தேவாலயங்களில் நடைபெற்ற பிரார்த்தனையில் ஏராளமானோர் பங்கேற்றனர்.   தூத்துக்குடி உலகப் புகழ்பெற்ற பணிமயமாதா பேராலயத்தில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. தேவாலயத்தில், நடந்த...

மின் விளக்கு அலங்காரம், ராட்டினங்களுடன் கண்கவர் திருவிழா... 108அடி நீள அலகு குத்தி வந்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பிளியனூர் அக்ரஹாரம் முனியப்பன் கோயில் திருவிழா களைகட்டியது. மின்விளக்கு அலங்காரம் மற்றும் பல்வகை ராட்டினங்கள், குழந்தைகள் உள்ளிட்ட பக்தர்களை ஈர்த்தது. பக்தர் ஒருவர் 108 அடியில் அலகு குத்திவந்து நேர்த்திக் கடன் செலுத்தினார். ...

அண்டார்டிகாவின் மிக உயரமான வின்சன் சிகரத்தில் ஏறிய முதல் தமிழ் பெண்

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் தமிழ் பெண் என்ற சாதனைக்கு சொந்தக்காரரான முத்தமிழ் செல்வி, தற்போது அன்டார்டிகா கண்டத்தின் மிக உயர்ந்த சிகரமான வின்சன் சிகரத்தின் மீது ஏறி சாதனை படைத்துள்ளார். இயற்கையை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 16 ஆயிரம் அடி...