RECENT NEWS

உலக நாடுகளுக்குப் பல கண்டுபிடிப்புகளை வழங்குகிறது இந்தியா - ஆர்.என்.ரவி

உலக நாடுகளுக்குப் பல கண்டுபிடிப்புகளை வழங்குகிறது இந்தியா - ஆர்.என்.ரவி

Jan 10, 2025

உலக நாடுகளுக்குப் பல கண்டுபிடிப்புகளை வழங்குகிறது இந்தியா - ஆர்.என்.ரவி

உலக நாடுகளுக்குப் பல கண்டுபிடிப்புகளை வழங்குகிறது இந்தியா - ஆர்.என்.ரவி

Jan 10, 2025

அரசியல்

நீட் தேர்வு ரத்து என்னாச்சு? பாயிண்ட்டை பிடித்த இ.பி.எஸ் சட்டப்பேரவையில் "நீட்" போர்.. முதலமைச்சர் கொடுத்த நச் பதில்

Jan 10, 2025 11:57 AM

20

287

நீட் தேர்வு ரத்து என்னாச்சு? பாயிண்ட்டை பிடித்த இ.பி.எஸ் சட்டப்பேரவையில் "நீட்" போர்..
முதலமைச்சர் கொடுத்த நச் பதில்

நீட் தேர்வு ரத்து என்னாச்சு? பாயிண்ட்டை பிடித்த இ.பி.எஸ் சட்டப்பேரவையில் "நீட்" போர்.. முதலமைச்சர் கொடுத்த நச் பதில்

எடப்பாடி கேள்வி: நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா?

முதலமைச்சர்: நீட் தேர்வு நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது, நாங்கள் ரத்து செய்வதற்கான முழு முயற்சி மேற்கொள்வோம்


ஆட்சி வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆயிற்று? ஆட்சி முடிய இன்னும் ஓராண்டுதான் இருக்கிறது

முதலமைச்சர்: நீட் தேர்வு ரத்துக்கான முயற்சியில் ஈடுபடுவோம் என்று நாங்கள் கூறியது உண்மைதான்


முதலமைச்சர்: எங்கள் கூட்டணி மத்தியில் ஆட்சிக்கு வரவில்லை. ராகுல்காந்தி நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறியிருந்தார்

முதலமைச்சர்: மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரவில்லை ஆனால் இப்போது மத்தியில ஆட்சியில் இருப்பது நீங்கள் முன்பு ஆதரவளித்த பாஜக


முதலமைச்சர்: நாங்கள் கூட்டணியில் இருந்தவரை நீட் தேர்வு தமிழகத்தில் நுழையவில்லை. ஜெ. இருந்தவரை கூட நீட் தேர்வு தமிழகத்தில் இல்லை. நீங்கள் முதல்வராக வந்த பின்தான் நீட் வந்தது

இ.பி.எஸ் : ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக திமுக தவறான தகவலை மக்கள் மத்தியில் பரப்பி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டது 

முதலமைச்சர் : எங்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று கூறியிருந்தோம், நீட் தேர்வை ரத்து செய்வது மத்திய அரசுதான் செய்ய வேண்டும் மாநில அரசால் செய்ய முடியாது இந்த அடிப்படை தெரியாதா எதிர்க்கட்சித் தலைவருக்கு?ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை மாநில அரசு எப்படி ரத்து செய்ய முடியும்? சராசரி அறிவு இருந்தால் கூட இது தெரியும்


ஆட்சிக்கு வந்தால் நாங்கள் நீட்டை ஒழிக்க முதல் கையெழுத்து போடுவோம் என்றெல்லாம் சொல்லவில்லை. மத்தியில் ஆட்சிக்கு வந்தால் நீட்டை நீக்குவோம் என்றுதான் கூறியிருந்தோம் 


இ.பி.எஸ் : தேர்தலுக்கு வரும் முன்பு திமுக ஒரு பேச்சு இப்போது ஒரு பேச்சு

முதலமைச்சர் : தேர்தலுக்கு முன்பு என்ன சொன்னாலும் இப்போது என்ன செய்யவில்லை என சொல்லுங்கள்

இ.பி.எஸ் : 2021 சட்டமன்ற பொது தேர்தலின் போது நீட் விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது தெரியும் ஆனால் இப்போது நீதிமன்றத்தில் வழக்கு உள்ள போது எப்படி நாங்கள் அதை ரத்து செய்ய முடியும் என்று முதலமைச்சர் கேட்கிறார் . மத்திய அரசுதான் ரத்து செய்ய முடியும் என்றே நாங்களும் கூறியிருந்தோம்

 
முதலமைச்சர்: உங்கள் ஆட்சியில் நீட் ஒழிப்பு தீர்மானம் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதே ஒரு ஆண்டுக்கு பின்தான் தெரியும். நீதிமன்றத்தில் உள்ளது என்பதை எதிர் கட்சித் தலைவரை ஒத்துக் கொள்கிறார். நீதிமன்றத்தில் நீட் விவரம் உள்ளது என்பதை சட்டமன்றத்தில் கூட தெரிவிக்காதவர் எடப்பாடி பழனிச்சாமி



இ.பி.எஸ்: வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது என்பது நாட்டு மக்களுக்கே தெரியும்

முதலமைச்சர்: அந்த தகவலையே ஒரு ஆண்டு முழுவதும் பேரவையில் கூறாமல் மறைத்திருந்தீர்கள்

இ.பி.எஸ்: திமுகவை போல மக்களை நாங்கள் ஏமாற்றவில்லை/ இந்தியா கூட்டணி டெல்லியிலேயே கலகலத்து போய்விட்டது


அமைச்சர் துரைமுருகன்: நீங்களாக இருந்தாலும் சரி நாங்களாக இருந்தாலும் சரி நீட் தேர்வு நீதிமன்றத்தில் இருக்கும் வரை ரத்து செய்ய முடியாது


இ.பி.எஸ்: நீட் தேர்வுக்கு பிள்ளையார் சுழி போட்டது திமுகதான்

முதலமைச்சர்: காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் போது நீட் கொண்டுவரப்பட்ட போது அதனை ஆரம்பத்திலேயே எதிர்த்தது கலைஞர் கருணாநிதி அவர்கள். நாங்கள்தான் நீட்டுக்கு பிள்ளையார் சுழி போட்டோம் என்பது தவறு

இ.பி.எஸ்: ஓராண்டு காலம் நீதிமன்றத்தில் நீட் தேர்வு குறித்த வழக்கு தூங்கிக் கொண்டிருந்ததை மறைத்தீர்கள்

முதலமைச்சர்: இப்போதும் சொல்கிறோம் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்

இ.பி.எஸ்: இண்டியா கூட்டணிக்கு தலைமை காங். காங். ஆட்சிக்கு வந்தாலும் நீட்டை நீக்காது.

இ.பி.எஸ் : இந்தியா கூட்டணி எப்போதும் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பு இல்லை. டெல்லி சட்டமன்றத் தேர்தல் இல்லையே இந்தியா கூட்டணியில் பிளவு வந்துவிட்டது



முதலமைச்சர்:  தேர்தலின் போது இது போன்று கூட்டணியில் பிளவு வருவது வழக்கம் தான், நீங்கள் கூட தான் இதற்கு முன்பு பிஜேபியுடன் கூட்டணியில் இருந்தீர்கள் அதன் பின்னர் விலகி இருக்கிறீர்கள்

இ.பி.எஸ்: தேர்தல் நேரத்தில் கூட்டணி மாறுவது இயல்புதான்.நீங்க கூட பிஜேபி கூட்டணியில்இருந்து விலகிருக்கீங்க


இ.பி.எஸ்:  இந்தியா கூட்டணியை ஆதரித்துக் கொண்டு கலைஞர் நூற்றாண்டு நாணயம் வெளியீட்டு விழாவில் பிஜேபி அழைத்து நாணயம் வெளியிட்டது ஏன்?

முதலமைச்சர்: மத்திய அமைச்சரை அழைத்து கலைஞர் கருணாநிதி நாணயம் வெளியிட்டதில் என்ன தவறு உள்ளது, பிரதமரை அழைத்தோம் அவரால் வர முடியவில்லை என்பதனால் மத்திய அமைச்சர் வந்து வெளியிட்டார் இதில் என்ன தவறு உள்ளது



இ.பி.எஸ்: அதிமுக பாஜக கூட்டணியிலிருந்து விலகி விட்டது ஆனால் திமுகவினர் கள்ளக் கூட்டணி என்று பேசுவது என்ன நியாயம்/ கள்ளக் கூட்டணி என்ற வார்த்தை அவை குறிப்பிலிருந்து சபாநாயகர் நீக்கினார்

இ.பி.எஸ்: அதிமுகவை பொருத்தவரை சரியானதை சரியாக செய்வோம். எது சரி என்பதை அண்ணா திமுக செய்யும் யாருக்கும் அடிமை இல்லை இருக்கும் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு இன்னொரு கட்சிக்கு வால் பிடிப்பது அதிமுக அல்ல எதுவென என்றாலும் தைரியமாக எதிர்த்து நிற்போம். யாருக்கும் அடிமை இல்லை , எதையும் தைரியமாக அறிவிப்போம்





SHARE

shareshareshareshare

RELATED POSTS

BIG STORIES

நீட் தேர்வு ரத்து என்னாச்சு?
பாயிண்ட்டை பிடித்த இ.பி.எஸ்
சட்டப்பேரவையில் "நீட்" போர்.."மாநில அரசால் நீட் தேர்வை ரத்து செய்யமுடியாது" "சராசரி அறிவு இருந்தால் கூட இது தெரியும்"

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved. Designed and Developed by Polimer News