1.15கோடி பயனாளிகளுக்கு வீடுகள் கட்ட அனுமதி.. மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் புரி தகவல்
பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 15 லட்சம் பயனாளிகளுக்கு வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப்சிங் புரி தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் இதுதொடர்பாக உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், பிரதமரின் நகர்ப்புற வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான காலம் வருகிற 31-ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது என்றார்.
இந்த திட்டத்தில் இணைய இன்னும் 2 நாள்கள் எஞ்சியிருப்பதால் பயனாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும், அனுமதிக்கப்பட்ட பயனாளிகளுக்கு பல்வேறு நிலைகளில் உள்ள கட்டுமானப் பணிகள் அடுத்த 18 மாதங்களில் நிறைவடையும் என்றும் அவர் கூறினார்.
Comments