மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 கல்வி உதவித் தொகை வழங்க உள்ளது போல் மாணவர்களுக்கும் அதனை வழங்க வேண்டும் - அண்ணாமலை
அரசுப் பள்ளியில் படித்த மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்க உள்ளது போல், மாணவர்களுக்கும் அதனை வழங்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழக பட்ஜெட்டிற்கு எதிராக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பேசிய அவர், பேருந்துக் கொள்முதல், பள்ளிக் கட்டமைப்பு மேம்பாட்டிற்கு போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை என குறிப்பிட்டார்.
Comments