சீனாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பு.. தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிப்பு
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளதால் டொயோட்டா, வோல்க்ஸ்வேகன், ஆப்பிள் போன்கள் தயாரிக்கப்படும் பாக்ஸ்கான் உள்பட பல்வேறு தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் கடந்தாண்டு பதிவான மொத்த கொரோனா பாதிப்புகளை விட கடந்த இரண்டரை மாதங்களில் அதிகம் பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அங்கு கடைபிடிக்கப்படும் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கோட்பாட்டால், பல்வேறு நகரங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் வாகனம், செல்போன் மற்றும் கணிணி தொழிற்சாலைகளில் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
Comments