நீலகிரியில் உலவும் டி23 புலியை கொல்ல வேண்டாம் - உயர்நீதிமன்றம்
நீலகிரி மாவட்டம் மசினகுடியில் சுற்றித்திரியும் ஆட்கொல்லி புலியை கொல்ல வேண்டாம் என வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, வனத்துறை சார்பில், புலியை கொல்லும் திட்டம் இல்லை, உயிருடன் பிடிக்கவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும், புலியின் கழுத்தில் ஏற்கனவே காயம் உள்ளது எனவும் கூறப்பட்டது.
இதை பதிவு செய்த நீதிபதிகள், அந்த புலி ஆட்கொல்லி புலியாக இல்லாமல் கூட இருக்கலாம் என்பதால், அதை உடனடியாக கொல்ல முயற்சிக்க வேண்டாம் என அறிவுறுத்தினர்.
புலியை பிடிக்கும்போது மற்ற விலங்குகளுக்கு எந்த இடையூறும் ஏற்படுத்த கூடாது எனவும், புலியை பிடித்த பிறகு அதற்கு உரிய சிகிச்சைகள் அளிக்க நடவடிக்கை எடுக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Comments