துப்பாக்கியுடன் மிரட்டிய நபர் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவரா ?
Published : Feb 05, 2020 7:17 AM
பிப்ரவரி முதல் தேதியன்று டெல்லி ஷஹின்பாக் பகுதியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய நபரான கபில் குஜ்ஜார் தமது தந்தை மற்றும் குடும்பத்தினருடன் ஆம் ஆத்மி கட்சியில் அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் சிங் முன்னிலையில் இணைந்த புகைப்படங்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். இந்த படங்கள் கபில் குஜ்ஜாரின் செல்போனில் இருந்து எடுக்கப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இது சாதாரண படமல்ல, ஆம் ஆத்மி கட்சி இளைஞர்களை தவறாகப் பயன்படுத்துவது இதன் மூலம் அம்பலமாகியிருப்பதாக தெரிவித்தார். புகைப்படத்தில் இடம் பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் சஞ்சய் சிங், தேர்தலுக்கு முன்பாக இந்த புகைப்படங்களை வெளியிட்டு ஆம் ஆத்மியின் செல்வாக்கை குலைக்க பாஜக முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார்.