உள்ளாட்சி தேர்தலில் தோல்வியடைந்த தி.மு.க. வேட்பாளர் ஊர் மக்களுக்கு கறி விருந்து படைத்தார்
Published : Feb 04, 2020 2:28 PM
உள்ளாட்சி தேர்தலில் தோல்வியடைந்த தி.மு.க. வேட்பாளர் ஊர் மக்களுக்கு கறி விருந்து படைத்தார்
Feb 04, 2020 2:28 PM
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ளாட்சி தேர்தலில் தோல்வியடைந்த தி.மு.க. வேட்பாளர் ஊர் மக்களுக்கு கறி விருந்து வைத்த விநோதம் அரங்கேறியுள்ளது.
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் சிதம்பரத்தை அடுத்த பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க. சார்பில் போட்டியிட்டவர் முத்துப்பெருமாள். இவர் அ.தி.மு.க. வேட்பாளரிடம் 3 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
ஆனாலும் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பெரியாண்டிக்குழி என்ற கிராம மக்களுக்கு பிரியாணி விருந்து படைத்தார்.
பொதுவாக வெற்றி பெறும் வேட்பாளர்களே அதன் பிறகு மக்களை திரும்பிப் பார்க்காத நிலையில் தோல்வியடைந்த வேட்பாளர் ஒருவர் மக்களை சந்தித்து கறி விருந்து வைத்து நன்றி தெரிவித்து வருவது மக்களின் கவனத்தை கவர்ந்து வருகிறது.