​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிக்க முடிவு...

Published : Jan 06, 2020 12:53 PM

சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிக்க முடிவு...

Jan 06, 2020 12:53 PM

இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குமாறு மத்திய அரசுக்கு வலியுறுத்தப்படும் என ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவிரி-தெற்கு வெள்ளாறு இணைப்புத் திட்டம், சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் திட்டம் நீட்டிப்பு, மாமல்லபுரம் சுற்றுலா மேம்பாட்டுக்கு ரூபாய் 563 கோடியில் திட்டம் உள்ளிட்ட அறிவிப்புகள் ஆளுநர் உரையில் இடம்பெற்றன.

புத்தாண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினார். அனைவருக்கும் காலை வணக்கம், புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள் என்று கூறி அவர் உரையை தொடங்கினார்.

பெண்ணையாற்றுப் படுகையில் மார்க்கண்டேய ஆற்றின் குறுக்கே நீர்தேக்கம் கட்ட கர்நாடகா திட்டமிடுவதாகவும், இதை மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது. இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டுமென தமிழக அரசு மத்திய அரசினை வலியுறுத்தும் என அவர் தெரிவித்தார்.

காவிரி-தெற்கு வெள்ளாறு இணைப்புத் திட்டம் வரும் நிதியாண்டில் மேற்கொள்ளப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

தமிழ்நாடு சுற்றுலா ஊக்குவிப்பு திட்டம் 2000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட உள்ளதாகவும் ஆளுநர் கூறினார். மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 12,500 கோடி ரூபாய் அளவிற்கு கடன் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டது. கல்லூரி இடைநிற்றல் மாணவர்களில் 1 லட்சம் பேரை தேர்வு செய்து சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என்றும் ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டது.