​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அரசு மருத்துவமனைகளில் 219 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு

Published : Jan 05, 2020 4:00 PM

அரசு மருத்துவமனைகளில் 219 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு

Jan 05, 2020 4:00 PM

குஜராத் மாநிலம் ராஜ்கோட் மற்றும் அகமதாபாத் அரசு மருத்துவமனைகளில்  கடந்த ஒருமாதத்தில் 219 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அரசு மருத்துவமனையில் ஒரு மாதத்தில் 100க்கும் மேற்பட்ட (107) பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்து விட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் கடந்த ஒரு மாதத்தில் ராஜ்கோட் அரசு மருத்துவமனையில் 134 பச்சிளம் குழந்தைகளும், அகமதாபாத் அரசு மருத்துவமனையில் 85 பச்சிளம் குழந்தைகளும் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக ராஜ்கோட் மருத்துவமனையில் 2019ம் ஆண்டில் மட்டும் 1235 குழந்தைகள் பலியானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து முதலமைச்சர் விஜய் ரூபானியிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். ஆனால் அவர் பதிலளிக்காமல் சென்று விட்டார்.