​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கெயில் குழாயை சுத்தம் செய்த போது வயலில் விழுந்த ரப்பர் உருளை

Published : Jan 05, 2020 10:40 AM

கெயில் குழாயை சுத்தம் செய்த போது வயலில் விழுந்த ரப்பர் உருளை

Jan 05, 2020 10:40 AM

நாகை மாவட்டத்தில் கெயில் நிறுவன குழாய் தூய்மைபடுத்தும் பணியின் போது ரப்பர் உருளை வயல் வெளியில் பயிர்கள் சேதமடைந்தததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சீர்காழி அருகே பழையபாளையம் கிராமத்தில் இயற்கை எரிவாயு கொண்டு செல்ல கெயில் நிறுவனம் குழாய் அமைத்துள்ளது. இந்த குழாயில் உள்ள சேறு மற்றும் சகதியை அகற்றும் பணி சில நாட்களாக நடைபெற்று வருகிறது.

நேற்று மாலை  கெயில் நிறுவன குழாய் தூய்மை பணியின் போது குழாயில் இருந்து  அதிவேகத்தில் வெளியேறிய காற்றின் அழுத்தம் காரணமாக சுத்தம் செய்ய பயன்படுத்திய ரப்பர் உருளை மற்றும் வால்வு அப்பகுதியில் உள்ள வயல் பகுதியில்  விழுந்தது.

இதனால் வயல் பகுதியில் நன்றாக விளைந்த சம்பா சாகுபடி பயிற்கள் சில இடங்களில் பாதிக்கபட்டுள்ளதாக விவசாயிகள் கூறியுள்ளனர்.