​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. திண்டுக்கல் நகர பகுதிகள், பாலகிருஷ்ணாபுரம், கோவிலூர், உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. சேலத்தில் சின்னக்கடை வீதி, அம்மாபேட்டை, பொன்னமாப்பேட்டை, பழைய பேருந்து நிலையம்...

ஒரு கிணற்றிலிருந்து.... தினமும் 10 ஆயிரம் லிட்டர் குடி நீர் விநியோகம் அசத்தும் இயற்கை விவசாயி

தண்ணீர் தண்ணீர் என்று பலரும் தத்தளித்து வரும் நிலையில், மழை நீரை சேகரித்து கிராம மக்களுக்கு நாள்தோறும் 10 ஆயிரம் லிட்டர் வரை குடிநீர் கொடுத்து வருகிறார் சீர்காழியை சேர்ந்த இயற்கை விவசாயி ஒருவர். மழை நீர் சேகரிப்பின் மகத்துவத்தையும், அவசியத்தையும்...

பிரசவத்திற்கு சென்ற கர்ப்பிணி பெண் உயிரிழப்பு

நாகப்பட்டினத்தில், தனியார் மருத்துவமனையில் பிரசவத்தின் போது பெண் உயிரிழந்த நிலையில், மருத்துவமனையின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த, தலைஞாயிறுவைச் சேர்ந்த பாத்திமா பீவிக்கு நேற்று காலை அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. அவருக்கு ரத்தம்...

கோடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற நாய்கள் கண்காட்சி

நாகப்பட்டினத்தில் கோடை விழாவை முன்னிட்டு நாய் கண்காட்சி நடைபெற்றது. இதில் பலவகை விலை உயர்ந்த நாய்கள் இடம் பெற்றன. இதில் நாய்கள் கண்காட்சி பார்வையாளர்களை கவர்ந்தது.ரேட் வில்லர் ,ஜெர்மன் ஷெப்பர்ட், சைபீரியன் அஸ்கி, ராஜபாளையம் நாட்டு நாய்கள் உள்பட ஏராளமான நாய்கள் கலந்துக்...

“நீட்”டை வென்ற ஏழை மாணவி - வறுமையை வெல்ல முடியாமல் தவிப்பு

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே தமிழ்வழியில் பயின்று, மருத்துவராகும் கனவுடன் நீட் தேர்வில் வெற்றியும் பெற்று, வறுமை காரணமாக மருத்துவப் படிப்பில் சேர முடியாமல் தாயோடு கூலி வேலைக்குச் சென்று வருகிறார் மாணவி ஒருவர். காமேஸ்வரம் கிராமத்தைச் சேர்ந்த சுபா என்ற அந்த...

குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் வீணாகும் தண்ணீர்

நாகை மாவட்டம் சீர்காழி அருகே கெயில் குழாய் புதைக்கும் போது கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் குழாய் உடைந்ததால் இரண்டு நாட்களாக தண்ணீர் வீணாகிறது. ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு குழி தோண்டிய போது சாலையின் அருகே புதைக்கப்பட்டிருந்த கூட்டுக் குடிநீர் குழாயை கெயில் நிறுவனத்தினர்...

கி.மு 3ம் நூற்றாண்டைச் சார்ந்த பொருட்கள் அகழ்வாய்வில் கண்டுபிடிப்பு

நாகை மாவட்டம் சீர்காழி அருகே நாங்கூரில் கி.மு 3ம் நூற்றாண்டைச் சார்ந்த பொருட்கள் அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நாங்கூரில் கடந்த சில நாட்களாக தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக கடல்சார் வரலாறு மற்றும் தொல்லியல் துறை சார்பில் அகழ்வாராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆய்வின்போது, ஏராளமான...

ஏற்றுமதி செய்யப்படும் மீன்களின் விலை சரிவு - மத்திய அரசு நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை

ஏற்றுமதி மீன்களுக்கான விலை குறைந்துள்ள நிலையில், இதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என நாகை மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மீன்பிடி தடைகாலம் கடந்த ஏப்ரல் 14ம் தேதி முடிவடைந்ததையடுத்து,  கடலுக்கு சென்ற நாகை மீனவர்கள் அதிகாலை கரை திரும்பினர். இதனால்...

3 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி சர்க்கரை ஆலை ஊழியர்கள் உண்ணாவிரதம்

 நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே 3 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி சர்க்கரை ஆலை ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைஞாயிறு கே.ஆர். ராமசாமி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணிபுரியும் அனைத்துத் தொழிற்சங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 2018 - 2019 ஆண்டுக்கான...

கடல் காற்றால் உப்பு மண் படிந்து சேதமடையும் மின்கம்ப “இன்சுலேட்டர்கள்”

நாகை அருகே உப்பு மண் படிந்த பீங்கான் இன்சுலேட்டர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து மின்வாரிய ஊழியர்கள் சுத்தம் செய்து வருகின்றனர். விழுந்தமாவடி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட விழுந்தமாவடி, காமேஸ்வரம், பூவைத்தேடி, வேளாங்கண்ணி உள்ளிட்ட கடலோர பகுதிகளில் அடிக்கடி வீசும் உப்புக்...